’அட்ராசிட்டியை ஆரம்பிக்கலாமா ?’ …யுவன் ஜம்முன்னு ஒரு கம் பேக் !

’அட்ராசிட்டியை ஆரம்பிக்கலாமா ?’ …யுவன் ஜம்முன்னு ஒரு கம் பேக் !
Published on

ரெஸ்ட் எடுக்கிறேன் பேர்வழி என்று துபாய் குறுக்குச் சந்துகளில் ஒளிந்துகொள்கிற தமிழ் சினிமாக்காரர்கள் பட்டியலில் சிம்புவுக்கு அடுத்தபடியாக யுவனுக்கு ஒரு நிரந்தர இடமுண்டு. அந்த ரெஸ்ட் போரடித்து பத்து பாடல்கள் கொண்ட ஒரு ஆல்பத்தோடு இம்மாதம் கம் பேக் கொடுக்கிறார் யுவன்.

அடிக்கடி காதல் தோல்விகளை சந்திக்கிற இக்கால யுவன், யுவதிகளுக்கு காதல் ஆறுதல் பாடல்கள் நிறைய போட்ட வகையில் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு கோடிகளில் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அப்பா 6 பாடல்களை ஒரே நாளில் முடித்துத் தருபவர் என்றாலும் யுவன் அப்படியே ரிவர்ஸ். இயக்குநர்கள் இவரை தேடிக்கண்டுபிடிப்பதே கஷ்டம். ஸோ யுவனிடம் போனால் பாட்டு வாங்கித் திரும்ப ஆறு மாதங்கள் வரை கூட ஆகலாம் என்கிற நிலை.

இந்நிலையில் இன்று தனது எக்ஸ் தளப்பதிவில் அவரது ரசிகப்பட்டாளத்துக்கு ஆனந்த அதிர்ச்சி அளித்திருக்கிறார் யுவன்.

அப்பதிவில் ‘ டைரக்டர் இளனுடன் எனது மூன்றாவது படம் ‘பியார் ப்ரேமா கல்யாணம். அடுத்து வெளிவரும் எனது இந்த ஆல்பத்தில் 10 பாடல்கள். அட்ராசிட்டியை ஆரம்பிக்கலாமா?’ என்று அறிவித்திருக்கிறார். இந்த ஆல்பம் ஆகஸ்ட் 21 அன்று ரிலீஸாகிறது.

பலபேரு பாட்டே இல்லாம படம் எடுக்க ஆரம்பிச்சிருக்கிற நிலையில பத்துப் பாட்டுகளா? நிஜமாவே அட்ராசிட்டிதான்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com