இவர்கள் தொல்லை தாங்கல..! கோட் பரிதாபங்கள்!

யுவன் சங்கர் ராஜாவின் இன்ஸ்டா பதிவு
யுவன் சங்கர் ராஜாவின் இன்ஸ்டா பதிவு
Published on: 

இயக்குநர்கள் வெங்கட் பிரபு, விஷ்ணுவர்த்தனை கிண்டல் செய்யும் பாணியில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பதிவிட்ட இன்ஸ்டா பதிவு வைரலாகி வருகிறது.

லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68ஆவது படமான `கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (G.O.A.T. - Greatest Of All Times) படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.

இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

முன்னதாக, விசில் போடு மற்றும் சின்னச் சின்ன கண்கள் ஆகிய இரண்டு பாடல்களைப் படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர்.

தொடர்ந்து, படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகஸ்ட் 1 ஆம் தேதி கோட் படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகும் என தெரிவித்திருந்தார். இது, 3ஆவது பாடலின் அறிவிப்பாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், இசையமைப்பாளர் யுவன் தனது இன்ஸ்டா பக்கத்தில், “இவர்கள் தொல்லை தாங்கவில்லை” எனக் கூறி வெங்கட்பிரபு, விஷ்ணு வர்த்தன் கீழே உட்கார்ந்திருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். ஆனால் மூன்றாவது பாடல் பற்றி எந்த அறிவிப்பும் இல்லை.

இந்த பதிவுக்கு ’தலைவன் குசும்புக்காரன்’, ’எங்க ஆளுக்கு தில்ல பாத்தியா’ என்பது கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5-ஆம் தேதி கோட் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com