இளையராஜா - பாரதிராஜா - மனோஜ்
இளையராஜா - பாரதிராஜா - மனோஜ்

மார்கழி திங்கள்: 31ஆண்டுகளுக்குப் பின் இணைந்த பாரதிராஜா – இளையராஜா!

மனோஜ் இயக்கத்தில் பாரதிராஜா நடிக்கும் ‘மார்கழி திங்கள்’ படத்திற்காக இளையராஜா இசையில் பாடல் ஒலிப்பதிவு நடைபெற்றது. இது தொடர்பான வீடியோ வெளியாகி ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

தாஜ்மஹால் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மனோஜ், மார்கழி திங்கள் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் மூலம் இயக்குநராகும் மனோஜ், தன்னுடைய தந்தையான இயக்குநர் பாரதிராஜாவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளார்.

இந்தப் படத்தை இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இப்படத்திற்கு முதலில் ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பதாக இருந்தது. ஆனால், அவருக்கு பதிலாக இளையராஜா இணைந்துள்ளார்.

இந்த நிலையில், படத்திற்கான பாடல் ஒலிப்பதிவு நடைபெறுள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்று இன்று வெளியானது. அதில், இளையராஜா பாடலை பாட, பாரதிராஜா ரசித்துக் கேட்டு கொண்டிருக்கிறார். மனோஜ், சுசீந்திரன் ஆகியோர் இளையராஜாவை வியப்பாக பார்த்து கொண்டுள்ளனர்.

மார்கழி திங்கள் படத்தின் மூலம் பாரதிராஜாவும் இளையராஜவும் இணைந்து பணியாற்றியுள்ளனர். கடந்த 1992 ஆம் ஆண்டு நாடோடி தென்றல் என்ற படத்தில் கடைசியாக இருவரும் ஒன்றாக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com