’ஹாய்’ நோ ரிலீஸ்… என்னதான் ஆச்சி நம்ம நயன்தாராவுக்கு ?

’ஹாய்’ நோ ரிலீஸ்… என்னதான் ஆச்சி நம்ம நயன்தாராவுக்கு ?
Published on

எடுத்த முடிவுகளில் பிடிவாதமாய் இருப்பதில், ’ஒரு தடவை சொல்லிட்டா என் பேச்சை நானே கேட்கமாட்டேன்’ ரகத்தைச் சேர்ந்தவர் நடிகை நயன்தாரா. ஆனால் சமீபகாலமாக அவரது தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்‌ஷர்ஸ் அடுத்தடுத்து பல சங்கடங்களை சந்திப்பதால் தனது ‘ஹாய்’ பட ரிலீஸை சில வாரங்களுக்கு தள்ளிவைத்திருப்பதாக ஷாக் தகவல்.

பாடலாசிரியர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் நயனின் ரவுடி பிக்‌ஷர்ஸ் தயாரித்திருக்கும் படம்’ ஹாய்’. இப்படத்தில் நயனுக்கு ஜோடியாக கவின் நடித்திருக்கிறார். கடந்த மாதம் அறிவித்திருந்தபடி இப்படம் அடுத்த வாரம் ஆகஸ்ட் 14 அன்று ரிலீஸாவதாக இருந்தது. அதே தேதியில் சூர்யாவின் ‘விஸ்வநாதன் அன்ட் சன்ஸ்’ ரிலீஸாகவிருப்பதால் ’எதற்கு தேவையில்லாத ரிஸ்க்?’ என்று கணவர் உள்ளிட்ட பலரும் சொன்னபோது நயன் அதை செவிமடுக்காமல் ரிலீஸ் தேதியை அறிவித்திருந்தார்.

இந்நிலையில் கடந்த இரு தினங்களாக வெளியாகும் செய்திகள் ‘ஹாய்’ ரிலீஸ் தேதியை நயன் ஓரிரு வாரங்களுக்கு தள்ளிவைத்துவிட்டதாக தெரிவிக்கின்றன. சூர்யா படத்துக்கு கிடைத்த தியேட்டர்களில் பாதி கூட ஹாய் படத்துக்கு கிடைக்கவில்லை என்பதுவும், சில நிதி நெருக்கடிகள் செட்டில் பண்ணப்படவில்லை என்பதுவும் காரணங்கள் என்கிறார்கள்.

அடுத்து வரக்கூடிய தனுஷ் படத்தோட மோதுவார் போல.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com