தேவையானவை..
1. கோழிக்கறி - 500கி
2. இஞ்சி - 20கி
3. பூண்டு - 20கி
4. மஞ்சள்தூள் - 1 1/2 தேக்கரண்டி
5. இலவங்கப்பட்டை - 2
6. கிராம்பு - 6
7. ஏலக்காய் - 2
8. தேங்காய் துருவல் - சிறிய அரை மூடி தேங்காய்
9. பச்சை மிளகாய் - 6
10. மல்லிதூள் - 2 தேக்கரண்டி
11. வெங்காயம் - 1
12. முந்திரி - 20கி
13. சீரகம் - 1 தேக்கரண்டி
14. சோம்பு - 1 தேக்கரண்டி
15. கடுகு - 1 தேக்கரண்டி
16. கறிவேப்பிலை - 2 கொத்து
17. எண்ணெய் - 3 தேக்கரண்டி
18. உப்பு - தேவையான அளவு
19. தக்காளி - 3
20. கொத்தமல்லி தழை - 1 கொத்து
ஒரே மாதிரியாக வெட்டப்பட்ட கோழிக்கறியுடன் 2 தேக்கரண்டி உப்பு, 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிசைந்து ஐந்து நிமிடம் ஒதுக்கிவைக்கவேண்டும். முந்திரியை அரை மணி நேரம் ஊற வைக்கவேண்டும். ஊற வைக்கப்பட்ட முந்திரியுடன், தேங்காய் துருவல், இஞ்சி, பூண்டு, சோம்பு, சீரகம், பச்சை மிளகாய், மஞ்சள் தூளை சேர்த்து அரைத்துக் கொள்ளவேண்டும். கடாயில் எண்ணெய்யை ஊற்றி மிதமான சூட்டில் கடுகு மற்றும் கருவேப்பிலை போட்டு தாளிக்கவேண்டும். பின்பு இதனுடன் இலவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்க வேண்டும். இதனுடன் அரைத்து வைக்கப்பட்ட மசாலாவை சேர்த்து மிதமான சூட்டில் வேக வைக்கவும். பின்பு நறுக்கப்பட்ட தக்காளியை சேர்த்து நன்கு கலவையாக வரும் வரை வேகவைக்கவேண்டும். இதனுடன் கோழிக்கறி, தேவையான அளவு உப்பையும் சேர்த்து கோழிக்கறி நன்றாக வேகும் வரை சமைக்கவும். கோழிக்கறியின் மீது கொத்தமல்லி தழையை தூவி புலாவ், தோசை, சப்பாத்தி, எலுமிச்சை சாதம் அல்லது புரோட்டாவுக்கு சுவையான கோழிக்கறி குருமாவை பரிமாறவும்.
ஜனவரி, 2016.