1. மெல்லிய முட்டை நூடுல்ஸ் - 225கி
2. கோழிக்கறி - 1/2கி( நெஞ்சு பகுதி)
3. முட்டை - 1
4. குடைமிளகாய் - 50கி
5. கேரட் - 50கி
6. சிறிய வெங்காயம் - 50கி
7. இஞ்சி - 10கி
8. பூண்டு (அரைத்தது) - லீ தேக்கரண்டி
9. முட்டைக்கோஸ் - 50கி
10. பெரிய வெங்காயம் - 50கி
11. மொச்சை - 50கி
12. எண்ணெய் - 4 தேக்கரண்டி
13. சோயா சாஸ் - 1 தேக்கரண்டி
14. ஸ்வீட் மிளகாய் சாஸ் - 1 தேக்கரண்டி
15. மிளகு - தேவையான அளவு
16. உப்பு - தேவையான அளவு
ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீரை எடுத்துக்கொண்டு அதில் எண்ணெய், உப்பு, நூடுல்ஸ் ஆகியவற்றை சேர்த்து நன்கு மசியும் வரை வேக வைக்கவும். எண்ணெய் சேர்ப்பதால் நூடுல்ஸ் ஒன்றோடு ஒன்றாக ஒட்டாது. சிறிய துண்டுகளாக வெட்டப்பட்ட கோழிக்கறியுடன் உப்பு, மிளகு, சோயா சாஸ் சேர்த்து கலக்கி வைத்துக்கொள்ளவும். காய்கறிகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். எண்ணெயை சூடேற்றி அதில் இஞ்சியை வதக்கி, அதனுடன் முட்டையை
சேர்த்து துருவலாக வரும் வரை வதக்கவும். இதனுடன் கோழிக்கறியை சேர்த்து நன்றாக வேகவைக்கவும். பின்பு இதனுடன் வெங்காயம், கேரட், குடைமிளகாய், முட்டைகோஸ் சேர்த்து வதக்கி, நூடுல்ஸ் மற்றும் ஸ்வீட் மிளகாய் சாஸ் சேர்த்து நன்றாக கலக்கவும். கடைசியாக மொச்சையையும், வெட்டப்பட்ட பெரிய வெங்காயத்தையும் சேர்த்து வதக்கி, சூடான சிக்கன் நூடுல்ஸை பரிமாறவும்.
மார்ச், 2016.