1. கோழி கறி - 500கி
2. இஞ்சி - 25கி
3. பூண்டு - 25கி
4. பச்சை மிளகாய் - 2
5. மஞ்சள் தூள் - 1 லீ தேக்கரண்டி
6. கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
7. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
8. மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
9. மிளகு தூள் - லீ தேக்கரண்டி
10. இலவங்கப்பட்டை - 2
11. முழு கிராம்பு, ஏலக்காய் - தலா 2
12. கறிவேப்பிலை - 2 கொத்து
13. வெங்காயம் - 1
14. தக்காளி - 1
15. எலுமிச்சை சாறு - லீ தேக்கரண்டி
16. கொத்தமல்லி தழை - 2 கொத்து
17. புளி கரைசல் - 1 தேக்கரண்டி
18. எண்ணெய் - 4 தேக்கரண்டி
19. உப்பு - தேவையான அளவு
செய்முறை: ஒரே அளவாக வெட்டப்பட்ட கோழிக்கறியுடன், 2 தேக்கரண்டி உப்பையும்,1 தேக்கரண்டி மஞ்சளையும் சேர்த்து பிசைந்து ஐந்து நிமிடம் ஒதுக்கி வைக்கவும். பாதி அளவு இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள், பாதி அளவு கரம் மசாலா, மிளகு, உப்பை சேர்த்து கலவையாக வைத்துக்கொள்ள வேண்டும். கோழிக்கறியுடன் 2 தேக்கரண்டி எண்ணெய்யை ஊற்றி நன்றாக கலந்து அரை மணி நேரம் ஒதுக்கி வைக்கவும். மீதமுள்ள எண்ணெய்யை சூடேற்றி அதில் சிக்கனை போட்டு பொன்னிறமாக வரும் வரை வேக வைக்கவும். வெங்காயம்,தக்காளி,கறிவேப்பிலை ஒன்றாக சேர்த்து நன்கு வதக்கி, இதனுடன் கரம் மசாலா,மல்லி தூள் சேர்த்து சிறிது நிமிடம் வேக வைக்கவும். பின்பு இதனுடன் கோழிக்கறி மற்றும் புளி கரைசல் சேர்த்து சிறிது நேரம் வேக வைக்கவும். இறக்கி வைத்து சிறிது நேரம் கழித்து எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லி தழையை சேர்க்கவும். இக்கோழி வறுவலை புரோட்டா, புலாவ் மற்றும் சப்பாத்திக்கு பரிமாறவும்.
டிசம்பர், 2015.