கோவிந்த் சந்து
கோவிந்த் சந்து

மாரத்தான் வீரருக்கு கேன்சர்... அவர் சுட்டிக்காட்டும் 3 அறிகுறிகள்!

நல்ல உணவு, தூக்கம், யோகா, உடற்பயிற்சியுடன் மாரத்தானும் ஓடுபவர் அவர். நல்லாத்தானே இருக்கோம் என நினைத்துக் கொண்டிருந்தார். சமீபத்தில் ஒரு மாரத்தான் ஓடிவிட்டு வந்தவர் மறுநாள் மருத்துவரைப் போய்ப் பார்த்தார். மருத்துவர் பரிசோதனைக்குப் பின்சொன்னார். ‘உங்களுக்கு கேன்சர். நாலாவது கட்டத்தில் இருக்கிறது’

நம்ப முடியாத நிலை.. ஆனால் நம்பித்தான் ஆகணும்…

ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் கோவிந்த் சந்து (வயது 38). இவரின் உடற்பயிற்சி வீடியோவை பார்த்தால் மிரண்டு போவீர்கள். முறுக்கேறிய உடம்பு கொண்டவர்.

இவருக்குத்தான் சமீபத்தில் கேன்சர் உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதுவும் நான்காம் கட்ட நிலையில். கடந்த மே மாதம் சிட்னியில் நடந்த, அரை மாரத்தானில் ஓடியிருக்கிறார் கோவிந்த். மறுநாள் அவருக்கு கால் வீங்கியதோடு, அவருக்கு காய்ச்சல், வியர்வை, உடல் வலி ஆகிய மூன்று அறிகுறிகள் தென் பட்டுள்ளன. இதனால் மறுநாளே மருத்துவரை சென்று பார்த்துள்ளார். பரிசோதனையில் அவருக்கு நிணநீர்க்குழியப் புற்றுநோய் (non-Hodgkin's lymphoma) இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்த நான்கு வாரத்தில் அவரின் உடல் நிலை மோசமாகியுள்ளது.

ஒது தொடர்பாக இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்டுள்ள கோவிந்த், “நான் புற்றுநோய் நிபுணர் இல்லை. ஏதேனும் அறிகுறிகள் உங்களுக்குத் தென்பட்டால், மருத்துவரை சென்று பாருங்கள். எப்போதும் சுறுசுறுப்பாக இருங்கள். வருடத்திற்கு இரண்டு முறை ரத்த பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.” என்று தன்னை பின் தொடர்பவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

“இப்போதான் வாழ்க்கை நல்லா போயிட்டு இருக்குனு” சமீபத்தில் வீடியோ வெளியிட்டிருந்த இந்த சமூக ஊடக பிரபலத்துக்கு கேன்சர் வந்திருக்கிறது. இது மக்கள் எல்லோருக்கும் ஒரு பாடம். முறையாக உடல் பரிசோதனைகளைச் செய்துகொள்ள ஒரு எச்சரிக்கை.

logo
Andhimazhai
www.andhimazhai.com