கேன்சர் மருந்து... இவ்வளவு விலைக் குறைப்பா?

cancer medicine price reduced
கேன்சர் மருந்துகள் விலை குறைப்பு
Published on: 

புற்றுநோய்க்கான 543 மருந்து பிராண்டுகளின் அதிகபட்ச விலைகளை, தேசிய மருந்து விலைக் கட்டுப்பாட்டு ஆணையம் திருத்தியமைத்துள்ளது. இதன் மூலமாக சில மருந்துகளின் விலை 90% வரை குறைந்துள்ளது.

பல்வேறு ஜெனரிக், பயோசிமிலர் பிராண்டுகளின் விலை பெருமளவில் குறைந்துள்ள நிலையில், எம்.எஸ்.டி. பார்மாவின் 'கீட்ரூடா' போன்ற விலையுயர்ந்த புற்றுநோய் மருந்துகளின் விலை எந்த மாற்றமும் இல்லாமல், பழைய நிலையிலேயே நீடிக்கிறது.

குறிப்பாக மார்பகப் புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படும் 'பால்போசிப்ளிப்' என்ற மருந்தின் விலை ரூ. 40,421-இல் இருந்து, தற்போது ரூ. 2,270ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

இதேபோல, புற்றுநோயை வேகமாகக் குணமடையச் செய்யவும், உடல் முழுவதும் பரவாமல் இருக்கவும் சமர்த் லைஃப் சயின்சஸ் நிறுவனம் தயாரிக்கும் சக்திவாய்ந்த 'தியோடெபா' என்ற மருந்தின் 100 மில்லிகிராம் குப்பியின் விலை ரூ. 80,072-இல் இருந்து ரூ. 7,150ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

இதேபோல, பல்வேறு வகையான புற்றுநோய் சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தப்படும் 'டசாடினிப்', 'லென்வாடினிப்', 'அபிராடெரோன்', 'ஓலாபரிப்' ஆகியவற்றின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், மார்பகப் புற்றுநோய்க்குப் பயன்படுத்தப்படும் 'ரிபோசிக்ளிப்' மருந்தின் விலை மாற்றமின்றி ரூ.24,435ஆகவே உள்ளது.

இந்த திருத்தப்படுத்த மருந்துகளின் விலை வரும் நவம்பர் 9ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தேசிய மருந்து விலைக் கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. முன்னதாக, மிக அதிக விலையில் விற்கப்படும் புற்றுநோய் மருந்துகள் குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது. அதைத் தொடர்ந்து, இந்த விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com