அந்திமழை இளங்கோவன் நினைவு சிறுகதைப் போட்டி 2025 முடிவுகள் அறிவிப்பு!

அந்திமழை இளங்கோவன்
அந்திமழை இளங்கோவன்
Published on

இது அந்திமழை இதழ் நடத்துகிற மூன்றாவது சிறுகதைப் போட்டி. 428 பேர் ஆர்வத்துடன் கலந்துகொண்டிருந்தார்கள். உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தெல்லாம் சிறுகதைகள் வந்திருந்தன. கலந்துகொண்ட அனைவருக்கும் முதலில் நன்றி. இந்த எழுத்தார்வம் மேலும் வளர்த்தெடுக்கப் படவேண்டும்.

கடந்த இரு முறை போட்டிகளுக்கு நடுவர்களாக இருந்த மூன்று எழுத்தாளர்கள்- கவிதா முரளிதரன், பாக்கியம் சங்கர், அதிஷா – இம்முறையும் பரிசுக்குரிய கதைகளைத் தேர்வு செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொண்டனர்.

நடுவர் குழு
நடுவர் குழு

முதல்கட்ட வாசிப்பில் 124 கதைகளை அந்திமழை ஆசிரியர் குழு தேர்வு செய்தது. அவற்றிலிருந்து 26 கதைகள் இறுதிக்கட்டத்துக்கு வந்தன. நீண்ட விவாதத்துக்குப் பின்னர் 15 கதைகள் பரிசுக்குத் தேர்வாகி உள்ளன.

மானுட உணர்வுகளையும் சமூகப் பிரச்னைகளையும் பேசிய கதைகளில் கவனம் குவித்து நடுவர்கள் இந்தப் பரிசுக்கதைகளுக்கான இறுதிப் பட்டியலுக்கு வந்தடைந்தனர்.

போட்டி முடிவுகள்
போட்டி முடிவுகள்

ஜூன் அந்திமழை இதழில் முதல் 9 கதைகள் இடம்பெறுகின்றன. மீதிக் கதைகள் அடுத்த இதழில். வாசகர்களுக்கு இது நிச்சயம் ஒரு வாசிப்புத் திருவிழாவாக அமையும். போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும் பரிசு பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.

-ஆசிரியர்

logo
Andhimazhai
www.andhimazhai.com