அங்கேயே நிற்கும் மனம்!

அங்கேயே நிற்கும் மனம்!
Published on: 

சமகால வாழ்வியல் மீதான எள்ளல்களைக் கையாளும் விதமாக இயங்குகிறவை சுகதேவ் கவிதைகள். இந்தத் தொகுப்பிலும் அதுபோன்ற விசேஷமான தொனியுடன் கூடிய பளிச் கவிதைகள் நிறைய இடம் பெற்றுள்ளன.

/பாதியில்

கலைந்துபோன

கனவின் மிச்சத்தில்

அவன்

இன்னமும் வாழ்கிறான்

அதன் பிறகு

உறங்கவே இல்லை/ இது எள்ளலுடன் கூடிய எதார்த்தம்.

நீ வந்தபிறகு வடை சுடலாம் என்றிருந்தேன்/ வரும்போதே/ சுட்டுக் கொண்டு வந்துவிட்டாய்/ வடையைப் பொறுத்தமட்டில்/ யார் முதலில் சுடுகிறார்கள்/ என்பதே மேல் கணக்கு/ - என்கிறார் இன்னொரு கவிதையில். வடை சுடுகிறவர்களுடனான சுகதேவின் அனுபவம் பேசுகிறது. மேல்கணக்கு என்கிறார். கீழ்க்கணக்கு என ஒன்று இருக்கவேண்டுமே எனத் தோன்றுகிறது.

எக்ஸ்பிரஸ் ரயிலின்

அதிவேகத்தில்

கடந்துபோன

அந்த ஊரின் பெயர்

என்னவாக இருக்கும்…

அங்கேயே நிற்கிறது

மனம்

இவ்வாறான அன்றாடங்களின் உணர்வுநிலைகளையும் பதிவு செய்திருக்கிறார். நேரிடையாக எளிய சொற்களின் வழியாக சிக்கலான உணர்வுகளைக் கடத்தும் மொழிவன்மையுடன் கூடிய கவிதைகள் அடங்கிய தொகுப்பு.

அசையும் நிழலில் சாய்ந்தாடும் மனம், சுகதேவ், சந்தியா பதிப்பகம், விலை: ரூ.160

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram