ராசி அழகப்பன் எழுதி இருக்கும் அறிவோம் இதழியல் நூல் 834 பக்கங்களில் பிரமாண்டமாக வெளியாகி இருக்கிறது. இதழியலின் தொடக்கம், இந்திய இதழியல், தமிழ் இதழியல், இதழியல் எப்படிச் செயல்படுகிறது?, இதழியல் மற்றும் அறம், தொலைக்காட்சி மற்றும் புதிய ஊடகம், டிஜிட்டல் இதழியல், செயற்கை நுண்ணறிவும் இதழியலும், எதிர்கால இதழியல் ஆகிய தலைப்புகளில் எளிமையான சொற்களில் இதழியல் பாடம் நடத்துகிறார் ராசியார். தாய், தினமலர், அரும்பு, மய்யம், ஜனரஞ்சனி ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றி, திரைப்படத் துறையில் இயங்கியவர். தற்போது டிஜிட்டல் வடிவங்களிலும் தொடர்ந்து இயங்கிவருபவர் என்பதால் தன் பல்லாண்டு பணி அனுபவத்தைச் சாரமாக்கி இந்நூலைத் தந்துள்ளார்.
நூலில் இருந்து: செய்தியாளரின் மொழிக்கான பத்து சிறந்த கட்டளைகள்: 1)முதலில் உண்மையை அறி. 2) வாசகரை மனதில் வைத்தே எழுது. 3) எளிய சொல்லைப் பயன்படுத்து, 4குறுகிய வாக்கியங்களை அமை, 5) முக்கிய தகவலை முதலில் கொடு, 6) எண்களையும் பெயர்களையும் சரிபார், 7) உன் கருத்தை செய்திக்குள் மறைக்காதே, 8) ஆதாரம் இல்லாத தகவலை எழுதாதே, 9) குற்றச்சாட்டைத் தீர்ப்பாக மாற்றாதே, 10) வெளியிடுவதற்கு முன் பலமுறை வாசி.
இதழியல் மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டி நூல்.
அறிவோம் இதழியல், ராசி அழகப்பன், வெளியீடு: பேஜஸ், சென்னை 119. பேச: 9176804412. விலை:ரூ.1000