ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்வு எப்படி இலக்கியத்தில் பதிவாகி இருக்கிறது என்பதை உலக இலக்கிய அறிமுகத்துடன் ஆரம்பித்து இன்றைய நவீன தமிழ் இலக்கியம், திரைப்படங்கள் வரை பல்வேறு எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் எழுதிய பல கட்டுரைகளைத் தொகுத்து இந்நூலைக் கொண்டுவந்துள்ளார் நூலாசிரியர். கடந்த பல்லாண்டுகளில் பல பத்திரிகைகளில் வெளியான எழுத்துகள் இவை. இது போன்ற ஏராளமான தொகுப்புகளை ஏற்கெனவே பல்வேறு தலைப்புகளில் வெளியிட்டுள்ளவர்தான் இவர். அந்த அனுபவம் இந்நூலிலும் சிறப்பாக பிரதிபலித்துள்ளது.
சுந்தரராமசாமி, இந்திரன், எஸ்.வி.ராஜதுரை, அ.ராமசாமி, மதிவண்ணன், ஜெயமோகன், அன்பாதவன், நீல. பத்மநாபன், அழகிய பெரியவன், ஸ்டாலின் ராஜாங்கம் உள்ளிட்ட ஏராளமானோரின் கட்டுரைகள் சிறுசிறு பதிவுகளாக இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இன்றைய தலித் இலக்கியம், கலை, சமூகப்பார்வை உள்ளிட்ட ஒரு பறவைப் பார்வையை இந்நூல் நிச்சயம் தருகிறது.
இன்றைய தலித் இலக்கியம், முனைவர் அ.பிச்சை, நியூஸ்மேன் பப்ளிகேஷன்ஸ், மதுரை. பேச: 9080330200 விலை ரூ.300