புதிய பார்வை

புதிய பார்வை
Published on: 

எளிமையான மொழியில் அழகிய காட்சிகளை திடீர்க்கோடுகளாய் உருவாக்கும் கவிதைகளைப் படைத்துத் தந்திருக்கிறார் ம.விஜய். மழைத்துளிகள், பட்டாம்பூச்சிகள், தண்டவாளங்கள், புத்தர், இயேசு, மீன்கள் போன்ற பேசுபொருட்கள் புத்தம்புதிய கோணங்களில் பேசப்பட்டிருக்கிறன. உதாரணத்துக்கு, ராவணனாய் /வீழ்ந்துக் கிடந்த/ பெருமரத்தின் கூட்டிலிருந்து /மண்டோதரியின் குரல் என்ற கவிதை, மரபை நவீனத்தின் மீது சுமத்திப் பார்க்கிறது.

கணவன் உசிர

எமனெடுத்துப் போனால்

திரும்ப

வாங்கிவருவதோடு

நிறுத்திக் கொள்

கணவனின்

சடலம் முன் ஆடவெல்லாம் உனக்கு அனுமதி இல்லை –

என்கிற கவிதை அட இது அந்த நிகழ்வல்லவா என்று நமக்கு பலவற்றை நினைவூட்டுகிறது. இதுபோல் சில சமகால நிகழ்வுகளையும் கவிதையாக்கிப் பார்த்திருக்கிறார். பல அன்றாட நிகழ்வுகளும்கூட கூர்மையான கவனிப்பால் கவிதை உருவம் கொள்வதையும் காணமுடிகிறது.

இளையராஜாவின் ஒளிப்பதிவுக் கூடம், ம.விஜய், வெளியீடு: மௌவல், வலங்கைமான். பேச: 9787709687

விலை: ரூ.150

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com