
இருக்கிறார்கள் இன்றும்
அவன்தான்
தன்னை கசக்கி எறியப்போகிறான் என்பதை உணராமல்
வரவேற்கும்
பூக்களின்
வாரிசுகள் - எனச் சொல்லும் தச்சன் நாகராஜன் கவிதைகள் இயற்கையின் மீதும் வாழ்க்கையின் மீதும் பரிவு கொண்டவையாக இருக்கின்றன.
யார் யாராலோ பிழியப்படுவதாக இருக்கிறது/ இந்த வாழ்க்கை/ குருதி சொட்டச் சொட்ட என்கிறபோது கவிஞர் புன்னகைக்கிறார். நாம் திகைத்துப் போகிறோம்.
நெடி, தச்சன் இரா.நாகராஜன், வெளியீடு: முரண்களரி, பேச:9092545686. விலை: ரூ.80
பூமியே போதும்
கவிஞர் கோ.வசந்தகுமாரனின் தேர்ந்தெடுத்த கவிதைகளின் இந்த தொகுப்பு மணிமணியான வரிகளால் ஆகியிருக்கிறது.
வானம்
வசப்படவேண்டாம்
பூமியே
எனக்குப் போதும்.
------------
வரிசையில் நின்று
தரிசனம் தந்தேன்
கடவுளுக்கு.
இப்படி மாற்றுகோண அழகியலில் உருவான கவிதைகளைக் கொண்ட தொகுப்பு இது.
பியானோ மீது கல்லெறிந்தாலும் இசை பிறக்கும், கோ.வசந்தகுமாரன், வெளியீடு: தமிழ் அலை, பேச: 7708597419,
விலை: ரூ.150