ஹோமியோபதி மருத்துவத்தை முன்னெடுக்கும் சென்னை அப்ரோச் என்கிற அமைப்பு அண்மையில் வெளியிட்டு இருக்கிற 25-வது ஆண்டு மலர் உண்மையிலேயே ஆச்சரியமூட்டுகிறது. ஆண்டு மலர் என்று புறந்தள்ளிவிட முடியாத அளவிற்கு ஆழமான கட்டுரைகளோடு ஆய்வு பூர்வமான தகவல்களோடு நிறைந்து சிறப்பான இதழாக வந்துள்ளது.
மலரில் கவனிக்க வைக்கும் பல கட்டுரைகள் உள்ளன. உதாரணமாக ஹோமியோபதி இதழ் என்னும் பாரம்பரியமும் இயக்கமும், நூற்றாண்டு நாயகன் ஹானிமன், மாமேதையின் அடிச்சுவட்டில் ஒரு மாமனிதர், தலைகோதும் கரங்கள் ரோஹித் பாய் என்னும் மருத்துவர், ஹோமியோபதி ஒரு பிரபஞ்ச மருத்துவம், ஹோமியோபதி முதன்மை மருத்துவமாதல் எப்போது?, குடும்ப நலனில் மெய் நிகர் காவலர்கள், ஹோமியோபதி வெல்லும், ஆட்டிசம்: நான் கண்ட உண்மைகள், ஹோமியோபதி மருத்துவத்தில் புதிய வழிமுறைகள் என்று பல்வேறு வகையான மருத்துவக் கட்டுரைகளோடு மட்டுமல்லாமல் மருத்துவ நோக்கில் இலக்கியம் சார்ந்த ஆண்டன் செகாவ் எழுதிய பாசாங்கு, எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய துயில் நூல் விமர்சனம் போன்றவையும் இடம் பெற்றுள்ளன.
உள்பகுதிகளில் எந்த விளம்பர இடையூறும் இல்லாமல் வாசிக்கும் வகையில் இந்த நூல் உருவாகி இருக்கிறது.
அப்ரோச் இலவச மருத்துவ மைய வெள்ளிவிழா மலர், அப்ரோச் அறக்கட்டளை, பிளாட் நம்பர் 542, எண் 74, எம்டிஹெச் ரோடு, வில்லிவாக்கம், சென்னை6000 49. போன் 94433 68861, 90927 75318
- ஆதித்யா