சிவசெல்வியின் சிறுகதைகள் ஆச்சர்யமூட்டுபவை. அந்திமழை இதழ் கடந்த ஆண்டு நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரது மொசக்கறி என்ற கதை முதல் பரிசுக்குத்தேர்வானது. வட்டாரச் சொற்களில் செழுமை, கதைமாந்தர்களின் அனுபவங்களை சேகரிப்பு இதெல்லாம் இவருக்கு எப்படி வாய்த்தன என இச்சிறுகதைத் தொகுப்புக்கு முன்னுரை எழுதி இருக்கும் எழுத்தாளர் என். ஶ்ரீராம் ஆச்சர்யப்பட்டுப் போகிறார். கொங்கு வட்டாரத்தின் வாழ்வும் அமராவதி சண்முகநதி ஆகியவற்றின் ஈரமும் கலந்து என் எழுத்து இருக்கவேண்டும் என ஆசைப்படுகிறார் சிவசெல்வி, ஒன்பது சிறுகதைகள் இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. நெல்கூட்டியில் வரும் முத்தாளையும் குப்பியையும் வாசித்தாலே திடுக்கிடுகிறது. இதுபோன்ற ஒவ்வொரு கதை மாந்தர்களையும் அவர்களின் வாழ்க்கையையும் சிவசெல்வி அழகாக கொங்குவட்டார வாழ்மொழியில் பதிவு செய்துள்ளார்.
நெல்கூட்டி, சிவசெல்வி செல்லமுத்து, வெளியீடு: தமிழ்வெளி, 1, பாரதிதாசன் தெரு, ஶ்ரீனிவாசா நகர், மலையம்பாக்கம், சென்னை 122 பேச: 9094005600 விலை ரூ 180.