சுமார் 250 திரைப்படங்களைப் பற்றி அலசல்கள் இந்நூலில் இடம்பெற்று, முன்னுரை எழுதி இருக்கும் திரைக்கதை மன்னர் கே பாக்யராஜையே அப்பப்பா என ஆச்சரியம் கொள்ள வைக்கின்றன. இன்னொரு இயக்குநர் லிங்குசாமியோ இது சமகால உலக சினிமாவின் மினி கையேடு என வியக்கிறார். மிகுந்த விமர்சனப்பார்வையுடன் இல்லாமல் அறிமுக நோக்கத்துடன் ஓடிடியில் கிடைக்கும் ஏராளமான படங்களைப் பற்றி எழுதி இருப்பதாக நூலாசிரியர் ஜேடி தெரிவிக்கிறார். மலையாளப்படமான அடிகோஸ் அமிகோவில் தொடங்கி சமீபத்தில் வெளியான இந்தித் திரைப்படமான ஸ்திரீ 2 வரைக்கும் இந்நூலில் எழுதியுள்ளார். வீட்டில் அமர்ந்து ஓடிடியில் படங்களைப் பார்க்கையில் எதைப் பார்ப்பது எதை விடுவது எனத் தோன்றும். அவற்றில் தேர்ந்தெடுத்துப் பார்க்க ஒரு வழிகாட்டி என இந்நூலைக் குறிப்பிடலாம். ஜேடியின் தனிப்பட்ட சினிமா பார்வையும் இப்படங்களின் தேர்வில் இடம் பெறுகிறது.
ஒடிடி சினிமா சில பதிவுகள், ஜோசப் டி’சாமி, ஜேடி பப்ளிஷர்ஸ், ஜேடி இல்லம், 12, சாஸ்திரி தெரு, சாந்தி நகர், சாலிகிராமம், சென்னை -93 விலை ரூ.300.