திரைக்கலை

சினிமாவின் ஆன்மா
சினிமாவின் ஆன்மா
Published on

சினிமாவை எப்படி அணுகுவது? சினிமா என்கிற கலையை அந்தத் தொழில் நுட்பத்தை அதற்கான புரிதலை பள்ளிப் பருவத்திலேயே ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும். அதுதான் இயக்குநர் சீனு ராமசாமி எழுதியுள்ள 'சினிமாவின் ஆன்மா' என்கிற நூலாகி இருக்கிறது.

உலகில் உள்ள எத்தனையோ தொழில்நுட்பம் போன்றதே சினிமாவும். ஆனால் இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா? சினிமா எப்படி புரிந்து கொள்ளப்பட வேண்டும் ? உண்மையான சினிமா எது? திரையில் தோன்றுபவர்களை ஆராதிக்கும் மனநிலை எப்படி வருகிறது ? ரசிகவுள்ளம் வழிபடும் உள்ளமாக எப்படி மாறுகிறது? மனச்சமநிலையில் சினிமாவை எப்படிப் பார்த்துப் புரிந்து கொள்ள வேண்டும்?என்றெல்லாம் சொல்லிக் கொடுக்க வேண்டி உள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் பள்ளிப் பருவத்திலேயே ஒன்றாம் வகுப்பில் இருந்தே சினிமா பற்றிய புரிதலை உண்டாக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார் 'சினிமாவின் ஆன்மா' நூலாசிரியர் இயக்குநர் சீனு ராமசாமி. பள்ளிச் சூழலில் சினிமா ரசனை அறிமுகம் என்கிற இந்த செயல் திட்டத்தில் இந்த நூல் ஒரு சிறு அறிமுக முயற்சி மட்டுமே என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இது தொடர் இயக்கமாக வளர்த்தெடுக்கப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது

சினிமாவின் ஆன்மா, சீனு ராமசாமி, வெளியீடு :சந்தியா பதிப்பகம், பேச: 98409 52919 விலை ரூ: 180

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com