இடமும் காலமும்

இடமும் காலமும்
Published on

நகர்ப்புறங்களில் வசிக்கும் சாமானிய மனிதர்களே சித்ரூபனின் சிறுகதையின் மாந்தர்கள். அவர்கள் தங்கள் அன்றாடங்களில் உழலுபவர்கள். அவர்களைப் பற்றிச் சொல்லும்போது அவர்களின் வாழிடங்களை அச்சு அசலாக நம் சுண்முன் நிறுத்துகிறது இவரது எழுத்து. பரிகாரம் என்ற இத்தொகுப்பில் இருக்கும் முதல் கதை கல்யாணம் தள்ளிப்போய்க்கொண் டே இருக்கும் தன் மகளைப் பற்றி கவலைப்படும் ஒரு தாயைப் பற்றியது. ஜோதிடர்கள், குறி சொல்கிறவர்கள் என்று தேடித் தேடி பரிகாரங்களாகப் பண்ணிக்கொண்டே இருக்கிறாள். கடைசியில் அந்த பரிகாரத்தாலேயே ஒரு வரன் அமையாமல் போவதாகக் கதையை முடிக்கிறார்! அடுத்த கதை சென்னையில் தொடங்கி பனாரஸில் முடிகிறது. மைலாப்பூரும் காசியும் கதையில் பாத்திரங்களாகவே வருகின்றன. இடங்களுக்கும் காலத்துக்கும் சித்ரூபன் தருகின்ற கவனமும் அழுத்தமும் வியப்பூட்டுகின்றன. அதே போல்தான் லண்டனில் நடப்பதாக எழுதியிருக்கு நிறம் என்கிற சிறுகதையும். 1/64 நாராயண முதலி தெரு சிறுகதையின் நீளம் அதிகம் என்றாலும் அதில் உறைந்திருக்கும் காலமும் பழங்கால் சென்னையும் மிக அரிதானவை. சுவாரசியமாகவும் துல்லியமாகவும் ஆன சிறுகதைகளைக் கொண்டு இருக்கிறது இத்தொகுப்பு

வெந்து தணிந்தது வீடு, சித்ரூபன், வெளியீடு: சுவாசம், சென்னை-127 பேச: 8148066645. விலை 250.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com