இலக்கியம்

இன்று ஒரு சொல் - புல்லுதல்
பொருள் விளக்கம் :
1. தழுவுதல். என்னாகம் . . . புல்லி (புறப்பொருள் வெண்பாமாலை)
2. புணர்தல். தம்மைப் புலந்தாரைப் புல்லாவிடல் (திருக்குறள்)
3. பொருந்துதல். அல்லாவாயினும் புல்லுவ வுளவே (தொல்காப்பியம்)
4. வரவேற்றல். புல்லா வகம்புகுமின் . . . என்பவர் மாட்டு (நாலடியார்)
5. ஒத்திருத்தல். புத்தே ளுலகிற் பொன்மரம் புல்ல (தொல்காப்பியம்)
6. ஒட்டுதல், நட்புச்செய்தல். ஒல்லா ரிடவயிற் புல்லிய பாங்கினும் (தொல்.).