
இன்று ஒரு சொல் - சேர்தல்
பொருள் விளக்கம் :
1. ஒன்றுகூடுதல். செம்பொன் செய்சுருளுந் தெய்வக்குழைகளுஞ் சேர்ந்து மின்ன (கம்பராமாயணம்)
2. கலத்தல் - நீரும் பாலுஞ் சேரும்.
3. சம்பந்தப்படுதல். சங்கத்தில் அவன் சேர்ந்தவன்.
4. நட்பாதல். அவனோடு சேர்ந்துகொண்டான்.
5. இயைதல்.
6. உரித்தாதல் - இந்த நிலம் அவனுக்குச் சேர்ந்தது.
7. சேகரிக்கப்படுதல் - நெய்க்கு வேண்டிய வெண்ணெய் சேர்ந்து விட்டது.
8. திரளுதல் - மால்வரை யொழுகிய வாழை . . . என . . . சேர்ந்து (சிறுபாணாற்றுப்படை)
9. செறிதல். அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை (திருக்குறள்)
10. கிடத்தல். மீக்கோளுடற் கொடுத்துச் சேர்தல் வழி (ஆசாரக்கோவை)
11. உளதாதல். தள்ளாவிளையுளுந் தக்காருந் தாழ்விலாச் செல்வருஞ் சேர்வது நாடு (குறள்).
12. செல்லுதல் - எண் சேர்ந்த நெஞ்சத்து (குறள்)
1. கூடுதல் - தீயினஞ் சேரக்கெடும் (நாலடியார்)
2. பொருந்துதல் - மழகளிறு கந்துசேர்பு (புறநானூறு)
3. புணர்தல் - அல்லில் வந்ததுண்டு சேர்ந்ததில்லை (தனிப்பாடல் திரட்டு)
4. அடுத்தல். மன்னரைச் சேர்ந்தொழுகல்.
5. பெறுதல். உறுதிசேர்ந் திவ் வுடம்பு நீட்டித்து நிற்கு மெனின் (நாலடியார்)
6. சென்றடைதல் - நும்மரண் சேர்மின் (புறநானூறு)
7. இடைவிடாது தியானித்தல். மாணடிசேர்ந்தார் (குறள்)
8. ஒப்பாதல் - கனஞ்சேர் குழலி (மருதூரந்தாதி).