இன்று ஒரு சொல் - கோடு

இன்று ஒரு சொல்
இன்று ஒரு சொல்
Published on: 

இன்று ஒரு சொல் - கோடு

பொருள் விளக்கம்:

1. வளைவு

2. நடுநிலை நீங்குகை. கோடிறீக் கூற் றம் (நாலடியார்)

3. யானை பன்றிகளின் தந்தம். மத்த யானையின் கோடும் (தேவாரம்)

4. விலங்கின் கொம்பு. கோட்டிடை யாடினை கூத்து (நாலாயிர திவ்விய பிரபந்தம்)

5. ஊது கொம்பு. கடுங்கட் காவலர் கொடுங்கோடு சிலைப்ப (பெருங்கதை)

6. நீர் வீசுங்கொம்பு. நீர்மணக் கோட்டி னர் (பரிபாடல்)

7. மரக்கொம்பு. (பிங்கல நிகண்டு)

8. யாழ்த் தண்டு. மகர யாழின் வான்கோடு தழீஇ (மணிமேகலை)

9. 'கெ' 'கே' முதலியவற்றின் தலைப்பிலுள்ள கொம்புக் குறியீடு. விலங்கு பெற்றும் கோடுபெற்றும் புள்ளி பெற்றும் (தொல்காப்பியம்)

10. பிறைமதி. கோடு மிலைந்தான் (திருக்கோவையார்)

11. சங்கு. கோடுமுழங் கிமிழிசை யெடுப்பும் (பதிற்றுப்பத்து)

12. குலை. (பிங்கல நிகண்டு)

13. மயிர்முடி. குரற்கூந்தற் கோடு (கலித்தொகை)

14. மலைச்சிகரம். பொற்கோட் டிமயமும் (புறநானூறு)

15. மலை. குமரிக் கோடும் (சிலப்பதிகாரம்)

16. மேட்டு நிலம். நறுங்காழ் கொன்று கோட் டின் வித்திய (மதுரைக்காஞ்சி)

17. வரி

18. ஆட்டம் முதலியவற்றுக்காக வகுத்த தானம். கோடின்றி வட்டாடல் கொள்வ தொக்கும் (தாயுமானவர் பாடல்கள்)

19. நீர்க்கரை. குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று (திருக்குறள்)

20. குளம். கோடெலா நிறையக் குவளைம் மலரும் (தேவாரம்)

21. காலவட்டம். கலியுகக் கோட்டு நாள்

22. வரம்பு. (பிங்.)

23. ஆடைக்கரை. கொடுந்தானைக் கோட்டழகும் (நாலடியார்)

24. முனை. கோடுகூடு மதியம் (பதிற்றுப்பத்து)

25. பக்கம். கோடுய ரடுப்பு (புறநானூறு)

26. அரணிருக்கை

27. கொடுமை. கோடற வைத்த கோடாக் கொள்கையும் (பதிற்றுப்.)

28. நீதிமன்றம். கோடு கச்சேரி