இலக்கியம்

இன்று ஒரு சொல் - புள்
பொருள் விளக்கம் :
1. பறவை - வேட்டு வன் புட்சிமிழ்த் தற்று (திருக்குறள்)
2. ஒருவகையான பறவை - புள்ளும் புதாவும் (சிலப்பதிகாரம்)
3. வண்டு- (சூடாமணி நிகண்டு)
புள்ளுண் பூந்தொடைக் குழலார்க்கு (சீவகசிந்தாமணி)
4. பறவைநிமித்தம் - புள்ளோர்த்துப் படை யமைத்து (அகநானூறு)
5. 23ஆவது நட்சத்திரம் ; அவிட்ட நாள். (திவாகர நிகண்டு)
பனைமுதற் புள்வரை பகர்ந்திடு கலிக்கும் (நன்னூல்)
6. கைவளையல் - புட்கை போகிய புன்றலை மகாரொடு (மலைபடுகடாம்)
7. மது - புள்ளே புனலே புலவியிம் மூன்றினும் (பரிபாடல்)