இலக்கியம்

இன்று ஒரு சொல் - ஓங்கல்
பொருள் விளக்கம் :
1. உயர்ச்சி (திவாகர நிகண்டு)
2. எழுச்சி (பிங்கல நிகண்டு)
3. மலை - ஓங்கலைத் தாங்க லுற்றான் (தேவாரம்)
4. மேடு (பிங்கல நிகண்டு)
5. மலையுச்சி- யாங்கு வல்லுநையோ வோங்கல் வெற்ப (ஐங்குறுநூறு)
6. மரம் - செருந்தியுஞ் செண்பக வோங்கலும் (சிலப்பதிகாரம்)
7. மூங்கில் (திவாகர நிகண்டு)
8. தலைவன் (பிங்கல நிகண்டு)
9. வலியோன் (பிங்.)
10. வழித்தோன்றல் (பிங்.)
11. மரக்கலம் (அகராதி நிகண்டு)
12. யானை (அகராதி நிகண்டு)
13. சாதகப்புள்- நீரிடும்பை புள்ளினு ளோங்க லறியும் (நான்மணிக் கடிகை)