இன்று ஒரு சொல் - நயம்

இன்று ஒரு சொல் - நயம்
இன்று ஒரு சொல் - நயம்
Published on

இன்று ஒரு சொல் - நயம்

பொருள் விளக்கம் :

1. அருள் - நன்னயம் பெற்றுழி (தொல்காப்பியம்)

2. விருப்பம்

3. மகிழ்ச்சி (பிங்கலநிகண்டு)

4. நன்மை - (திவாகர நிகண்டு). நயமுணராக் கையறி யாமாக்கள் (நாலடியார்)

5. உபசாரம் - சான் றோரை நயத்திற் பிணித்துவிடல் (நான்மணிக்கடிகை)

6. அன்பு - நயந்தலை மாறுவார் மாறுக (கலித்தொகை)

7. பக்தி - பஃறளியு நயங்கொண்டு பணிந்தேத்தி (அற்புதத் திருவந்தாதி)

8. நற்பயன் - நல்வினையுந் நயந்தந் தின்று (திருமந்திரம்)

9. மேம்பாடு- இதற்கு அது நயம்.

10. மலிவு- விலை நயமாயிருக்கிறது.

11. மிகுதி

12. பயன்- (திவாகர நிகண்டு). நன்றோ பழுதுளதோ நடுவுரைநீ நய மென்ன (கம்பராமாயணம்)

13. நுண்மை - தங்கக்கம்பி நயமாயிருக்கிறது.

14. இனிமை - நாரதமுனிவர்க்கேற்ப நயம் பட வுரைத்தநாவும் (கம்பராமாயணம்)

15. நீதி - நன்றி யீதென்றுகொண்ட நயத்தினை நயந்து (கம்பராமாயணம்)

logo
Andhimazhai
www.andhimazhai.com