இன்று ஒரு சொல்- தீருதவி

இன்று ஒரு சொல்
இன்று ஒரு சொல்
Published on

இன்று ஒரு சொல் - தீருதவி

பொருள் : நிவாரணம், துயர் துடைப்பு

அண்மைக் காலமாகவே, இந்தச் சொல்லானது தமிழ்நாட்டு அரசால் அதிகாரபூர்வ ஆவணங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முன்னதாக, நிவாரண உதவி எனக் கையாளப்பட்டு வந்தது பொருத்தமானதாக இல்லை என்று தமிழறிஞர்கள் அரசிடம் கருத்து தெரிவித்தனர்.

அதற்குப் பதிலாக, தமிழில், தீர்வு+ உதவி= தீருதவி எனப் புழங்கத் தொடங்கினார்கள். தற்போது, தீருதவித் தொகை என்பது அரசின் அதிகாரபூர்வ சொல்லாக ஆகிவிட்டது.

logo
Andhimazhai
www.andhimazhai.com