இலக்கியம்

இன்று ஒரு சொல் - அனைய
1. அந்தத் தன்மையான - அனைய செய்கையால் (கம்பராமாயணம்) 2. ஒத்த (கம்ப.) 3. அயில் உருப்பு அனைய ஆகி ஐது நடந்து (சிறுபஞ்சமூலம்) 4. கடல் பெயர்ந்து அனைய ஆகி (நற்றிணை)
5. நெருஞ்சி அனைய என் பெரும் பணை தோளே (குறுந்தொகை)
6. அருந்ததி அனைய கற்பின் (ஐங்குறுநூறு)
7. அக்குரன் அனைய கைவண்மையையே (பதிற்றுப்பத்து)