இலக்கியம்

இன்று ஒரு சொல் - அத்தம்
பொருள் :
1. கரிசலாங்கண்ணி
2. கண்ணாடி - அத்தமதின் முன்பின் போல்
3. வழி (பிங்கல நிகண்டு)
4. அருநெறி- ஆளி லத்த மாகிய காடே (புறநானூறு)
5. காடு (திவாகர நிகண்டு)
6. ஆண்டு சகாத்தம் (கம்பராமாயணம்)
7. பொருள் - உண்டான வத்தமும்
8. பொன் (பிங்.)
9. சொற்பொருள் - ஓதி யத்த முணர்ந்த பெருந்தவர்
10. பாதி (பிங்.)
11. அஸ்தகிரி. அத்த மென்னும் பொன் னஞ் சிலம்பு
12. கை (பிங்.)
13. ஒருநட்சத்திரம். அத்தத்தின் பத்தாநாட் டோன்றிய வச்சுதன் (நாலாயிர திவ்விய பிரபந்தம்)