இலக்கியம்

இன்று ஒரு சொல் - நூக்கு
பொருள் விளக்கம் :
1. தள்ளுதல். நூக்கிப் புறத்திரு போகென்னு மின்னாச் சொல் (நாலடியார்)
2. ஊசலாட்டுதல் - நடலைந் நடுவின் மகளிர் நூக்க (சீவகசிந்தாமணி)
3. அசைத்தல் - ஞாழற் படுசினை தோழியர் நூக்க (பெருங்கதை)
4. தூண்டுதல் - நூறுவாயென மாதலி நூக்கினான் (கம்பராமாயணம்)
5. எறிதல் - கைப் படையை நூக்கி (தொல்காப்பியம்)
6. முறித்தல் - ஊழாரத் தோய் கரை நூக்கிப் புனறந்த (பரிபாடல்)
7. நீக்குதல்
8. பரிகாரஞ்செய்தல். புண்களுற் றார்க் கிதுமருந்தென்ன . . . நூக்கினானே (சீவகசிந்தாமணி)
9. சாத்துதல் - வன்னிலைக் கதவ நூக்கி (திருவிளையாடல் புராணம்)