இன்று ஒரு சொல் - நரை

இன்று ஒரு சொல்
இன்று ஒரு சொல்
Published on: 

இன்று ஒரு சொல் - நரை

பொருள் விளக்கம் :

1. வெளுத்த மயிர். யாண்டு பலவாக நரையில வாகுதல் (புறநானூறு)

2. வெண்மை. மரை யாவின் கருநரை நல்லேறு (குறுந்தொகை)

3. எருது (பிங்கல நிகண்டு) கருநரைமேற் சூடேபோல் (நாலடியார்)

4. இடப ராசி

5. சாமரம். (பிங்.) இன்னரையின் பந்தி யசைந்தாட. (காளத்திநாதர் உலா)

6. கவரிமா. (பிங்.)

7. மூப்பு. நரைவரு மென்றெண்ணி நல்லறிவா ளர் குழவியிடத்தே துறந்தார் (நாலடியார்)

8. பெருமை. நரையுருமி னேறனையை (மதுரைக்காஞ்சி)

9. வெள்ளைக் குதிரை (சூடாமணி நிகண்டு)

10. பறவை வகை (பிங். )

11. நாரை

12. மரத்தினது அடியின் உட்பாகத்தில் காணும் சொத்தை அல்லது கேடு. நல்ல மரத்தில் நரைவிழுந்தது போலாச்சுது.