இலக்கியம்

இன்று ஒரு சொல் - ஓரி
பொருள் விளக்கம்:
1. முது நரி (பிங்கல நிகண்டு)
2. ஆண்நரி (பிங்.)
3. ஆண் முசு (பிங்.)
4. விலங்கின் சேக்கை (பிங்.)
5. ஆண் மயிர். (திவாகர நிகண்டு)
6. குதிரைப்பிடரிமயிர். ஓரி நுடங்க (பொருநராற்றுப்படை)
7. தேன் முதிர்தலாற் பிறக்கும் நீல நிறம். அணிநிறவோரி பாய்தலின் (புறநானூறு)
8. கடைவள்ளல்களுள் ஒருவன் (புறநானூறு)
9. ஓரியின் குதிரை. ஓரிக்குதிரை யோரியும் (சிறுபாணாற்றுப்படை).