கி. கோவிந்தன்
கி. கோவிந்தன்

மணற்கேணி சிறந்த நூலகர் விருது அறிவிப்பு!

Published on

மணற்கேணி ஆய்விதழ் சார்பில் வழங்கப்படும் சிறந்த நூலகருக்கான எஸ்.ஆர்.ரங்கநாதன் விருது இந்த ஆண்டு சென்னை கி. கோவிந்தனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மணற்கேணி ஆய்விதழின் ஆசிரியரும் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினருமான து. இரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பு :

“மணற்கேணி ஆய்விதழின் சிறந்த நூலகருக்கான எஸ்.ஆர்.ரங்கநாதன் விருதுக்கு இந்த ஆண்டு, சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகத்தின் நூலகர் கி.கோவிந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தருமபுரி மாவட்டம் வெள்ளாளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கி.கோவிந்தன் முதுநிலை அறிவியல் பட்டம் பெற்றவர். நூலக அறிவியல் துறையில் எம்ஃபில் பட்டம் பெற்று சென்னைப் பல்கலைக்கழக நூலகத்தில் 2 ஆண்டுகள் பணியாற்றியவர்.

2003 ஆம் ஆண்டு பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகத்தில் பணியில் சேர்ந்தார். 126 பிஎச்.டி. மாணவர்களுக்கும், 263 எம்.ஃபில். மாணவர்களுக்கும் ஆய்வின்போது உதவியிருக்கிறார். ‘இந்தியாவில் நூலகங்களின் வரலாறும் வளர்ச்சியும்’ என்ற நூலின் ஆசிரியர்.

எஸ்.ஆர்.ரங்கநாதன் விருது பாராட்டுப் பட்டயமும் 10 ஆயிரம் ரூபாய் பண முடிப்பும் கொண்டது.

செப்டம்பர் மாதம் 5 ஆம் நாள் இந்த விருது வழங்கும் நிகழ்வு நடைபெறும். நிகழ்விடம் பின்னர் அறிவிக்கப்படும்.

மணற்கேணி ஆய்விதழ் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் நூலகர்களுக்கு விருது வழங்கிவருகிறது. நரேந்திரன், உத்திராடம், ராஜேஷ் தீனா, முனைவர் செ.காமாட்சி ஆகியோர் இதுவரை இந்த விருதைப் பெற்றுள்ளனர்.”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com