கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருது பெறுவோர் அறிவிப்பு!

பொற்கிழி விருதுபெறும்  அருணன், சுரேஷ் குமார இந்திரஜித், என்.ஸ்ரீராம், நெல்லை ஜெயந்தா,கலைராணி, நிர்மல்யா
பொற்கிழி விருதுபெறும் அருணன், சுரேஷ் குமார இந்திரஜித், என்.ஸ்ரீராம், நெல்லை ஜெயந்தா,கலைராணி, நிர்மல்யா
Published on

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பொற்கிழி விருது பெறுவோர் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

ஆண்டுதோறும் நாவல், சிறுகதை, கவிதை, நாடகம், மொழிபெயர்ப்பு ஆகிய பிரிவுகளில் சிறந்த படைப்புகளை வழங்கிய எழுத்தாளர்களை கெளரவிக்கும் வகையில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருது அறிவிக்கப்பட்டு வருகிறது. விருது பெறுவோருக்கு பாராட்டு சான்றிதழுடன் ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படும்.

இந்நிலையில், 2024ஆம் ஆண்டிற்கான முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருது பெறுவோர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

உரைநடை பிரிவில் பேராசிரியர் அருணனுக்கும், கவிதை பிரிவில் நெல்லை ஜெயந்தாவுக்கும், நாவல் பிரிவில் சுரேஷ் குமார இந்திரஜித்துக்கும், சிறுகதைகள் பிரிவில் என். ஸ்ரீராமுக்கும், நாடகப்பிரிவில் கலைராணிக்கும், மொழிபெயர்ப்பு பிரிவில் நிர்மால்யாவுக்கும் பொற்கிழி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் டிசம்பர் 27ஆம் தேதி தொடங்க உள்ள புத்தக காட்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விருதாளர்களுக்கு விருதுகளையும், பரிசுத் தொகையையும் வழங்க உள்ளார்.

பபாசி விருது பெறுவோர்

சிறந்த பதிப்பாளருக்கான பதிப்பகச் செம்மல் க.கணாதி விருது - கற்பகம் புத்தகாலயம்

சிறந்த நூலகருக்கான விருது - Dr. R.கோதண்டராமன்

சிறந்த புத்தக விற்பனையாளருக்கான பதிப்புச் செம்மல் ச.மெய்யப்பன் விருது - பெல் கோ

சிறந்த குழந்தை எழுத்தாளருக்கான குழந்தைக் கவிஞர் அழ வள்ளியப்பா விருது - எழுத்தாளர் ஜோதி சுந்தரேசன்

சிறந்த தமிழறிஞருக்கான பாரி செல்லப்பனார் விருது - முனைவர் சபா.அருணாச்சலம்

சிறந்த பெண் எழுத்தாளருக்கான முதல் பெண் பதிப்பாளர் அம்சவேணி பெரியண்ணன் விருது - பேராசிரியர் பர்வீன் சுல்தானா அவர்கள்

சிறந்த சிறுவர் அறிவியல் நூலுக்கான நெல்லை சு.முத்து விருது - எழுத்தாளர் சங்கர சரவணன்

முத்தமிழ்க் கவிஞர் முனைவர் ஆலந்தார் கோ.மோகனரங்கன் கவிதை இலக்கிய விருது - மணவை பொன்.மாணிக்கம்

சிறந்த தன்னம்பிக்கை நூலுக்கான சிந்தனைக் கவிஞர் கவிதாசன் விருது - மரபின் மைந்தன் முத்தையா ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விருதாளர்களுக்கு விருதுகளையும், பரிசுத் தொகையையும் வழங்க உள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com