ஒரு கோடி பரிசு… புதிய இலக்கிய விருது அறிப்பை வெளியிட்டார் ஜெயமோகன்!

LIVING TAMIL AWARD FOR WORLD LITERATURE
LIVING TAMIL AWARD FOR WORLD LITERATURE
Published on

கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள எழுத்தாளர் ஜெயமோகன் LIVING TAMIL AWARD FOR WORLD LITERATURE என்ற பெயரில் புதிய விருதுக்கான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.

இந்திய இலக்கியத்தின் உயர்ந்த விருதாக கருதப்படும் ஞானபீட விருதை தமிழில் 1975இல் அகிலனும், 2002இல் ஜெயகாந்தனும் பெற்ற நிலையில், இந்த ஆண்டு கவிஞர் வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தமிழ் இலக்கிய உலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

வைரமுத்துவுக்கு ஞான பிட விருது அறிக்கப்பட்டதை நேற்று கடுமையாக விமர்சித்து சமூக ஊடகத்தில் பதிவு போட்டிருந்த எழுத்தாளர் ஜெயமோகன், இன்று புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஞான பீட விருதுக்கு மாற்றாக LIVING TAMIL AWARD FOR WORLD LITERATURE என்ற பெயரில் ஆண்டுதோறும் விருதுகள் அறிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தன்னுடைய இணையதளத்தில் எழுதியிருப்பதாவது:

“இதோ நாங்கள் அறிவிக்கிறோம், இந்திய வரலாற்றின் மிகப்பெரிய இலக்கிய விருது. உலக இலக்கியத்திலும் இந்திய இலக்கியத்திலும் சாதனைப் படைப்புக்கான LIVING TAMIL AWARD FOR WORLD LITERATURE. ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த விருது டெல்லியிலும் நியூயார்க்கிலும் ஆண்டுதோறும் அறிவிக்கப்படும். விருதுத்தொகை இந்திய ரூபாயில் ஒரு கோடி.” என்ற பதிவிட்டுள்ளார்.

அவரின் இந்த அறிவிப்பு இலக்கியவாதிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com