மஞ்சள் பிசாசு!

மஞ்சள் பிசாசு!
தூரிகை: ரவிபேலட்
Published on

"அளை விலை  உணவின் கிளையுடன் அருத்தி
நெய் விலைக் கட்டிப் பசும்பொன் கொள்ளாள்
எருமை, நல் ஆன் கரு நாகு பெறூஉம்.."
பெரும்பாணாற்றுப்படை
164 - 165

வேட்டை வாழ்க்கையின்
அடுத்த
வளர்ச்சிதான்
மேய்ச்சல் வாழ்க்கை.
முல்லைப் பெண்
இந்தப் பெண் விடிவதற்கு
முன்
எழுந்து
மோர் கடைந்து
வீதி வீதியாக
எடுத்துப் போய்
பண்டமாற்று
முறையில்
விற்று வந்த
உணவுப்
பொருள்களால்
உறவுகளுக்கும்
சமைத்துப்
பரிமாறிப்
பசியாற்றி
மகிழ்பவள்
இயல்பு வாழ்விற்கு
இது போதுமே.
இவள் வாழ்விற்குப்போக
மிகுதியான
சேமிப்பாக
நெய்விற்ற
செல்வம்
கிடைக்கிறது.
அதிகமாகும்
சேமிப்பைக்
கொண்டு
இன்று நாம்
என்ன வாங்குகிறோம்?

 தங்கம்
வாங்குகிறோம்

 அன்று அவளுக்கும்
தங்கம் வாங்குகிற
வாய்ப்பு
இருக்கிறது.

 இருந்தும்
அவள்
தங்கக் கட்டிகள்
வாங்கிச்
சேமித்துவைக்க
விரும்பவில்லை
செல்வம் என்பது
அவள் வழி மரபில்
மாடுகள்தாமே!

 அவள் மரபு வழியே
மிகுதிச்
சேமிப்பை
மாடுகளாக்கவே
விரும்புகிறாள்

 ஆம்…
நெய்விற்ற பணத்திற்கு
எருமை மாடுகளையும்
பசு மாடுகளையும்
கருவுற்ற மாடுகளையும்
கன்றுகளோடு
கூடிய
கறவை
மாடுகளாக
வாங்குகிறாள்.
ஒரு
சோவியத் அறிஞன்
பொன்னை...
‘மஞ்சள் பிசாசு'
என்று
சொன்னதை
அவள்
அன்றே
கேட்டிருப்பாள்
போல!

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com