முருகன் போர்!

முருகன் போர்!
தூரிகை: ரவிபேலட்
Published on

‘‘முருகன் நற் போர்''
அகநானூறு 01

முருகன் நல்ல
போருக்குரியவன்.
தமிழின
மான மீட்பிற்குரிய
நற்போர் செய்த
அறம் வழுவா
தமிழ்த் தலைவன்
முருகன்.

பல்வேறு கால
அடுக்குகளில்
பல்வேறு
புராணப்
புனைவுகளில்
முருகன் வரலாறு
மூடப்பட்டுள்ளது.


முருகன் யார் என்று
கேட்டால்..
முருகன்
தமிழ்க் கடவுள்
என்று
சொல்லத் தெரிந்தத்
தமிழர்களுக்கு
முருகன் தாயின்
பெயர்
என்ன
என்று கேட்டால்
‘கொற்றவை'
என்று
சொல்லத்
தெரியவில்லை.

முருகன்
யாரோடு போரிட்டார்
என்றால்
‘சூரபத்மனோடு'
என்கிறார்கள்.

அந்தப் போரின்
போலச் செய்தலாக
ஒரு விழா
நடக்கிறதே

அதனைத்
தமிழ்நாட்டுத் தமிழர்கள்..
தமிழ்நாட்டு இதழ்கள்.
ஊடகங்கள்..
என்ன சொல்லி
அழைக்கிறார்கள்?

‘சூர ஸம்ஹாரம்'
என்று.

கேரளத்தின்
பால(லை)க்காடு
இதற்கு
என்ன சொல்லி
மலையாளத்தில்
அழைக்கிறார்கள்?

‘சூரன் போர்'
என்று.

யாழ் மண்ணின்
நல்லூரில்?

‘சூரன் போர்'
என்று.

சூரன் போர்
என்று
தூய தமிழில்
சொல்கிறது மலையாளம்

சூரன் போர்
என்று தூய தமிழில்
சொல்கிறது யாழ்!

‘முருகன் நற் போர்'
என்கிறது
அகநானூறு.

தமிழ் நாட்டுத்
தமிழர்களுக்கு
மட்டும்
இன்றும்.
இன்றும்.
‘சூர ஸம்ஹாரம்!

ம்!

தூரிகை: ரவிபேலட்

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com