கவிதை

எழுத்து: அறிவுமதி; தூரிகை: ரவிபேலட்
"ஆறலை கள்வர் படை விட அருளின்
மாறுதலை பெயர்க்கு மருவின் பாலை" -பொருநர் 19-22
கொலை செய் கருவிதான்
’வில்'.
அந்தக்
கொலைக்
கருவியையே
இசை
செய்
கருவியாய்
மாற்றியவர்
மூவாயிரம்
ஆண்டுகட்கு
முந்தைய
மலைத்
தமிழர்.
அதற்குச்
சங்க
இலக்கியம
சூட்டிய
பெயர்தான்…
‘வில் யாழ்!' – பெரும்பா-182
அந்த
வில் யாழிலிருந்து
எழுந்த
‘பாலைப் பண்'
எனும்
தமிழிசை
என்ன
செய்ததாம்
தெரியுமா!
தங்கள் பசியைப்
போக்கிக்
கொள்ள
தங்கள் வழியே
போவோர்களைக்
கொன்று
கொள்ளையிட
‘ஆறலை கள்வர்கள்'
தங்கள்
கைகளில்
வைத்திருந்தார்களே...
வில் அம்பு
வேல்
வாள்
என
அத்தனை
கொலைக்
கருவிகளையும்
அவர்களின்
கைகளிலிருந்து
நழுவி
விழச் செய்தனவாம்!
யாழ்ப்
பாணர்களே!
உங்கள்
பாலைப்
பண்
தமிழிசைப் பாடல்களை
இதோ
இன்றைய
போரலை
கள்வர்கள்
முன்
இசைக்க மாட்டீர்களா!