
பிரபல நாவலாசிரியர் ஆர். சுமதி காலமானார். 1994 லிருந்து பிரபல நாவல் இதழ்களிலும் பிரபல பத்திரிகைகளிலும் நாவல்களும் சிறுகதைகளும் எழுதி வந்தவர் சுமதி. 200-க்கும் மேற்பட்ட நாவல்களையும் 300-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.
இவரது கணவர் ஆசிரியராக பணியாற்றுகிறார். ஒரே மகள் பல் மருத்துவராக இருக்கிறார்.
சுமதியின் சொந்த ஊர் சீர்காழி. தமிழில் எம். ஏ பட்டம், வரலாற்றின் எம். ஏ. பட்டமும் பெற்றுள்ளவர். ஓவிய ஆசிரியர் பயிற்சியும் முடித்து மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆவார்பூர் என்னும் ஊரில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றினார்.
இவருடைய முதல் நாவல் தேவியின் 'கண்மணி' இதழில் வெளி வந்தது. கண்மணி நடத்திய நாவல் போட்டியில் இரண்டாம் பரிசு கிடைத்தது.
ஒரு வானம் இரு நிலவு
அச்சம் விடு பச்சைக் கிளியே!
நீங்காத எண்ணம் ஒன்று
நீயின்றி நானில்லை
அன்பு மலர்கள் ஆகியவை சுமதி எழுதிய புகழ்பெற்ற நாவல்கள்.
கடந்த வருடம் மகாராஷ்டிரத்திவிருந்து கணவருடன் சென்னைக்குக் குடியேறினார். புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட சுமதி, தொடர் சிகிச்சையில் இருந்துள்ளார்.சிகிச்சை பலனின்றி நேற்றிரவு (04.05.2029) உயிரிழந்தார். அவரது உடல் கணவரின் ஊரான தரங்கம்பாடிக்குக் கொண்டுவரப்பட்டது.