
2025ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது 'தமிழ் சிறுகதையின் தடங்கள்' நூலுக்காக எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மொழிகளில் சிறந்த படைப்புக்காக வழங்கப்படும் உயரிய விருது சாகித்ய அகாடமி. கவிதை, நாவல், சிறுகதை, இலக்கிய ஆய்வுகள் அடிப்படையில் ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்படுகின்றன.
2025ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட இருந்த நிலையில், கடைசி நேரத்தில் திடீரென விருது அறிவிப்பு ரத்து செய்யப்பட்டது. நிர்வாக குழு உறுப்பினர்கள் பலரும் இந்த முடிவை கடுமையாக எதிர்த்தனர்.
“இனிமேல் பாஜககாரர்களுக்கு மட்டும் தான் விருது” என இலக்கிய உலகில் விமர்சிக்கத் தொடங்கினர்.
இந்த நிலையில், 2025ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி “தமிழ் சிறுகதையின் தடங்கள்” என்ற நூலுக்காக ச. தமிழ் செல்வனுக்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தேர்வுக்குழுவில் இடம்பெற்ற அரிமளம் சு. பத்மநாபன், எம். துர்கா, எஸ். ராஜேந்திரன் ஆகியோரின் பெயர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.