புலி வேட்டையின் கதை

புலி வேட்டையின் கதை

சிறு பிராயத்தில் வெட்டுப்புலி தீப்பெட்டியைப் பார்த்து என்னுடைய பாட்டி சொன்ன ஒரு வாக்கியம் மனதில் அப்படியே தங்கி இருந்தது.

‘இந்தப்  பயர்பாக்ஸ் பெட்டியில இருக்கிறது, எங்க ரங்காவரத்தார்டா பேரா.' தீப்பெட்டியின் லேபிளில் ஒருவன் வெட்டுக்கத்தியை ஒரு கை ஓங்கி நிற்க, அருகிலே சிறுத்தை புலி ஒன்று அவன் மீது பாய்வதற்கு தயாராக இருந்தது. வெட்டுக் கத்தியோடு இருந்த அவரைத்தான் என் அப்பாவைப் பெற்ற அம்மா, எங்க ரங்காவரத்தார் என்று சொல்லிக் கொண்டிருந்தார். ரங்காவரத்தார் என்றால் ரங்காவரம் என்ற ஊரைச் சேர்ந்தவர்.

யார் அவர் என்று பிற்காலங்களில் கேட்க ஆரம்பித்தேன். ‘உனக்கு தாத்தாவுக்குத் தாத்தா' என்று ஒரு உறவு முறை சொன்னார் பாட்டி.

 அப்போதும் இது எனக்கு ஒரு நாவலாக உருவாகும் என்று தெரியாது. 30 ஆண்டுகள் கழித்து ஒரு உரையாடலின்போது, நண்பர்களிடம் ‘இந்த அட்டைப் பெட்டியில் இருப்பவர் என்னுடைய தாத்தா' என்று சொன்னேன். பொதுவாக இப்படி நான் எங்கேயாவது சொல்லும்போது அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவர்கள் நம்பாமல் இருந்திருக்கக் கூடும்.

‘நல்ல விஷயமாக இருக்கிறது இதை நீங்கள் எழுதலாமே?' என ஆர்வம் காட்டியவர் கவிஞர் கடற்கரய்.

உண்மையிலேயே இதை ஒரு நாவலாக்க முடியுமா என்று எனக்கு அப்போது புரியவே இல்லை. எழுத்துத் துறையில் நான் வெற்றிடம் என நினைத்தவற்றை இதன்வழியேநிரப்ப முடியுமா என்றுஆவல்கொண்டேன். நான்படிக்கவிரும்பியொருதமிழ்நாவல்என்னால்எழுதப்பட்டது.

சுதந்திரப் போராட்ட இயக்கங்கள் குறித்து தமிழில் பாரதி தொடங்கி, கல்கி சி.சு.செல்லப்பா வரை அனேகர் எழுதியுள்ளனர்.  தேசியியக்கத்தில்இருந்துவிலகியோ, முரண்பட்டோ, இணையாகவோ தமிழகத்திலே ஓர் அரசியல் செயல்பாடு தொடர்ந்து கொண்டிருந்தது. பிராமணர் அல்லாதவரை ஒன்று திரட்டும் ஒரு செயல்பாடாக அது ஏன் உருவானது? அதற்கான தேவையாக அவர்கள் சொல்வது என்ன? அதற்கு மாபெரும் மக்கள் செல்வாக்கு ஏற்படுவது எப்படி? இதை வெட்டுப்புலி தீப்பெட்டியோடு இணைப்பது எப்படி என யோசித்தேன்.

ஓவியர் கோபுலு அவர்கள் குறித்து ஒரு சிறப்பைச் சொல்வார்கள். பொதுவாக ஒரு மனிதனை வரையச் சொன்னால் அவனுடைய முகத்தை முதலில் வரைவார்கள். அங்கிருந்து அவனுடைய மற்ற பாகங்கள் வரைவார்கள். அவனுக்குப் பின்னால் ஒரு மலையோ, தெருவோ வரைவார்கள். சூழலை உருவாக்குவார்கள். கோபுலு ஒரு மனிதனின் நகத்தில் இருந்தும்கூட ஓவியத்தைத் தொடங்குவார். அந்த மனிதன் சைக்கிள் ஓட்டுவான். பஞ்சு மிட்டாய் விற்பான். அவனைச் சுற்றி குழந்தைகள் இருக்கும். அது ஒரு காலகட்டத்தையே பிரதிபலிக்கும். ஆனால் அவர் பஞ்சு மிட்டாய் விற்பவனின் நகத்தில் இருந்து அதை ஆரம்பித்தார் என யாருக்கும் தெரியாது.

வெட்டுப்புலி அப்படித்தான் தொடங்கியது. தீப்பெட்டி லேபிள், தொடக்கப் புள்ளி. அது 20 ஆம் நூற்றாண்டின் தமிழகத்தைப் பிரதிபலிப்பதாக இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று முடிவு செய்தேன். தமிழக இருபதாம் நூற்றாண்டின் வரலாற்றில்

சினிமாவுக்கு இருந்த இடம், அரசியலுக்கு இருந்த இடம் இரண்டையும் வெட்டுப்புலி தீப்பெட்டியின் வரலாற்றோடு இணைப்பது நாவலுக்கு புதிய வண்ணத்தைக் கொடுத்தது.

இருபதாம் நூற்றாண்டு முதல் 21 ஆம்நூற்றாண்டின் தொடக்கம் வரை நாவலுக்கான காலத்தைத் தீர்மானித்தேன்.

அன்றைய ஒன்றிணைந்த செங்கல்பட்டு மாவட்டம்தான் கதைக்களம். பிராமணர் அல்லாதவரை ஒன்றிணைக்கும்முயற்சி தென்னிந்திய நலுரிமைச் சங்கத்தினரால்முன்மொழியப்பட்டது.அதுமெல்ல நீதிக்கட்சி என்றும் திராவிடர் கழகம் என்றும் திராவிட முன்னேற்றக் கழகம் என்றும் வளர்ந்தது. இது அத்தனையும் பெரும்பாலும் சுதந்திரப்போராட்டக் காலத்திலேயேநிகழ்ந்தது.

சென்னையைஅடுத்த இன்றைய திருவள்ளூர் மாவட்டத்தில் ஜெகநாதபுரம் என்ற கிராமத்தில் லட்சுமணரெட்டி என்ற இளைஞனின் குடும்ப வாழ்க்கையிலிருந்து இந்தமாற்றங்களைப் பார்க்கிறோம்.

‘ஐயிருமார்ங்க, நாமெல்லாம் சமமாவறதுக்குத்தான் இந்தக் கட்சியைத் தொடங்கியிருக்காங்க' என சுயமரியாதை இயக்கத்தைத் தன் குடும்பத்தில் அறிமுகப்படுத்துகிறார் லட்சுமண ரெட்டியின் அப்பா. அதற்கு லட்சுமண ரெட்டியின் அம்மாகேட்கும் பதில் கேள்வி இது:‘அதுஎப்படி நாமளும் ஐயரும் ஒண்ணாக முடியும்?அவங்கதான் கவிச்சி சாப்பிடுவாங்களா.இல்லநாம தான் தயிர் சோறு துன்னுட்டு கிடக்க முடியுமா?'குடும்பங்களில்அரசியல் பேச்சுகள் இப்படித்தான்ஆரம்பித்தன.

லட்சுமணரெட்டி ஒரு வெள்ளைக்கார சிப்பாயைப் பகைத்துக்கொள்ளநேர்கிறது.வெள்ளைக்காரர்களால்ஆபத்து வருமோ என பயப்படுகிறார்கள். அதனால் அவனை அவனுடைய சித்தப்பாவின் ஊரான ரங்காவரத்துக்கு  அனுப்பி வைக்கிறார்கள். அந்த சித்தப்பாதான் வெட்டுப்புலி லேபிளில் இருக்கும் சின்னா ரெட்டி. அதாவது சிறுத்தையை வெட்டி வீழ்த்தியவர்.

அப்போதுஅங்கே பூண்டி ஏரி உருவாக்கப்பட்டுவருகிறது. சுமார்10 கிராமங்கள் அப்புறப்படுத்தப்பட்டு,அந்தமக்களை வைத்தே அந்த ஏரியைத் தோண்டுகிறார்கள்.கரை அமைக்கிறார்கள். லட்சுமணரெட்டியின் சித்தப்பா மகன் ஏரி தோண்டும் காண்ட்ராக்டராக இருக்கிறார். லட்சுமணரெட்டி அந்த காண்ட்ராக்ட் வேலையில் ஈடுபடுகிறான்.அங்கேஅவனுக்கு ஒரு தலித் பெண்ணோடுகாதல் மலர்கிறது. இது ஊரில் பிரச்னை ஆகும் என்பதுதெரிந்து அந்த தலித் குடும்பம் ஊரைவிட்டே எங்கோ போய்விடுகிறது. லட்சுமணரெட்டி அந்தப் பெண்ணைத் தேடி அலைகிறான். அவள் கிடைக்கவே இல்லை. அப்படித் தேடித் திரிந்த நேரத்தில் ஊத்துக்கோட்டையில் ஒரு டென்ட் கொட்டாயைப் பார்க்கிறான். அதன் ஓனரின் மகன் சிவகுருவுக்கும் லட்சுமணரெட்டிக்கும் வாய்த் தகறாறு ஏற்பட்டு சண்டையில் முடிகிறது. பின்னாளில் சிவகுரு சினிமா படம் எடுக்கச் சென்னை வந்து நடிகை சபலத்தில் சீரழிகிறான்.

பூண்டி ஏரியைத் திறந்து வைக்க அன்றைய சென்னை மேயர் தீரர் சத்திய மூர்த்தி அங்கே வருகிறார். அவருக்கு திராவிடர் கழகத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

லட்சுமண ரெட்டிக்கு திராவிடர் கழகம் அறிமுகமாகிறது. ஈடுபாடு ஏற்படுகிறது.

அவருடையமகன் நடராஜன், ஈழப்போராட்டங்களில் ஆர்வம்காட்டுகிறான். ராஜீவ்காந்தி படுகொலைக்குப் பிறகு ஈழப் போராட்ட ஆதரவாளர்கள் ஒடுக்கப் படுகிறார்கள். அதில் விபத்துக்குள்ளாகி நடராஜன் கோமாவில் கிடக்கிறான். ஈழப்போர் முடிவில் தொலைக்காட்சியில் பிரபாகரன் இறந்து போனதாகக் காட்டுகிறார்கள். அவன்படுக்கையில் இருந்தபடியே அந்தக் காட்சியைப் பார்க்கிறான். கோமாவில் இருக்கும் அவன் கண்களில் நீர் வழிகிறது. இதுகதையின் மையச் சரடு.

ஆட்டுமந்தைக்கு காவல் இருக்கிறார் ஒருவர்.  நள்ளிரவில் சிறுத்தை ஒன்றுமந்தை இருந்த இடத்தில் நுழைந்ததைக் கண்டு, ஆடுகளைக்காக்க அத்துடன் போராடிவெல்கிறார். அது பிரபலமான சம்பவமாகப் பேசப்பட, அப்போது தொடங்கப்பட்ட ஒரு தீப்பெட்டி தொழிற் சாலைக்கு வெட்டுப்புலி என்பதையே பெயராக வைக்கிறார்கள்.  சமையல் கூடங்களிலும் ஆண்களின் பாக்கெட்டுகளிலும் சீட்டா ஃபைட் தீப்பெட்டி அந்த நூறாண்டு முழுவதும் பயணப்பட்டது போலவே வரலாறும் பயணப்பட்டது.

யாரும் எதிர்பார்க்காத ஓரிடத்தில் இருந்து என் நாவல் ஓவியங்களைத் தொடங்குகிறேன். முழுமையான ஓவியத்தை முடித்துவிட்டு வாசகர்கள் முன் வைக்கும்போது அவர்கள் நான் எதிர்பார்க்காத ஒரு விமர்சனத்தை முன் வைக்கிறார்கள். அது எனக்குப் பிடித்திருக்கிறது.

 

logo
Andhimazhai
www.andhimazhai.com