மதுரையில் ஹைக்கூ மாநாடு!

மதுரையில் ஹைக்கூ மாநாடு!

மதுரையில் ஜூன் 9ஆம் தேதி தமிழ் ஹைக்கூ மூன்றாவது உலக மாநாடு நடைபெற உள்ளது.

ஹைக்கூ கவிதையை தமிழில் வளர்த்தெடுக்கும் விதமாக ’தமிழில் ஹைக்கூ: மூன்றாவது உலக மாநாடு’ மதுரையில் வரும் ஜூன் 9ஆம் தேதி, உலகத் தமிழ்ச் சங்கம் அரங்கில் நடைபெற உள்ளது.

உலகத் தமிழ்ச் சங்கம், ஹைக்கூ கவிதையாளர்கள் இயக்கம், இனிய நந்தவனம் சார்பில் இந்த மாநாடு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினர்களாக அவ்வை அருள், கலாரமேஷ், ஹசிம் உமர், சீனிவாசன், அமுதபாரதி உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

இந்த மாநாட்டில் ஹைக்கூ கவிதை - கட்டுரை புத்தக வெளியீடு, ஹைக்கூ கவிஞர்களுக்கு விருதுகள், ஹைக்கூ வாசிப்பரங்கம், பகிர்வரங்கம், ஹைக்கூ அயலகப் பகிர்வரங்கம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

இந்த மாநாட்டை, மதுரை உலகத் தமிழ்ச் சங்க இயக்குனர் அவ்வை அருள் துவக்கி வைக்க உள்ளார். சிங்கப்பூர், மலேஷியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் உள்ள தமிழ் ஹைக்கூ கவிஞர்கள் பங்கேற்க உள்ளனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com