இலக்கியம்

இன்று ஒரு சொல் - ஞான்று
1.நாள் - ஊசலூர்ந்தாட வொருஞான்று வந்தானை (கலித்தொகை)
பைய முயங்கிய அ ஞான்று அவை எல்லாம் – (கலி.)
சீற்றமொடு ஆர் உயிர் கொண்ட ஞான்று இன்னன்-கொல்(கலி.)
வாய் பகுத்து இட்டு புடைத்த ஞான்று இன்னன்-கொல் (கலி)
அளை மாறி பெயர்தருவாய் அறிதியோ அ ஞான்று (கலி.)
நீர் அலர் நீலம் என அவர்க்கு அ ஞான்று(கலி.)
புது திங்கள் கண்ணியான் பொன் பூண் ஞான்று அன்ன நின்(கலி.)
2. காலத்தில் - அம்மனைக்கோ லாகிய ஞான்று (நாலடியார்)
3. ஞாயிறு ஞான்று கதிர் மழுங்கின்றே – (நற்றிணை)
4. மை இரு நூற்று இமை உண்கண் மான் மறி தோள் மணந்த ஞான்று (பரிபாடல்)
5. ஞான்று தோன்று அவிர் சுடர் மான்றால் பட்டு என (அகநானூறு)