தமிழர்களின் இலக்கே ஒரு வேலையில் அமர்வதுதான்

Published on

தேவி பத்திரிகையில் மிகவும் விரும்பி மகிழ்ச்சியாக வேலை செய்து கொண்டிருந்தேன். இராமச்சந்திர ஆதித்தனாரிடம் கற்றுக் கொள்ள நிறைய விஷயமிருந்தது. நிறைய புத்தகங்கள் வாங்குவதற்கு அனுமதி கொடுத்திருந்தார்.  நிறைய படித்தேன்.  தமிழர்கள் வளர்ச்சி, தமிழ் சமுதாய முன்னேற்றம் சார்ந்து நிறைய ஆர்வம் இருந்தது.  ஆங்கிலத்தில் நிறைய தன்னம்பிக்கை புத்தகங்கள், தொழில் புத்தகங்கள், இதழ்கள்  இருந்தன. ஆனால் தமிழில் அதுபோன்று எதுவுமேயில்லை. அந்த சமயத்தில் தமிழகத்-தில் மார்வாடிகளுக்கு எதிரான போராட்டமும் நடந்து கொண்டிருந்தது.  மார்வாடிகள் தமிழகத்திற்கு வந்து நிறைய சுரண்டிச் செல்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு இருந்தது. இது ஏனென்று யோசிக்கும்போது, அவர்கள் தொழில் தொடங்கி சம்பாதிக்-கிறார்கள் . பெரும்பாலான தமிழர்கள் அப்படியில்லாமல், தங்களுடைய இலக்கே ஒரு வேலையில் அமர்வது என்று தான் இருந்-தார்கள். ஒரு இனத்தின் வளர்ச்சி பணம் , படிப்பு சார்ந்து தான் இருக்கிறது. தமிழர்கள் வளர வேண்டுமானால் அவர்களை பணம் சம்பாதிக்கத்  தூண்ட வேண்டும். பத்திரிகை வழியாக அதை எப்படிச் செய்வது என்று யோசித்தபோது உருவானது தான் தொழில் துறைக்கான தமிழ் இதழ்.

முதலில் எங்களுடைய ஆசிரியர் திரு.இராமச்சந்திர ஆதித்தனாரிடம் தான் தொடங்க வேண்டினேன். விற்பனையாகாதுன்னு சொல்லிவிட்டார். பிறகு வா.செ.குழந்தைசாமி அவர்களை சந்தித்தேன். அவர் நிறைய உற்சாகப்படுத்தினார். பெரிய தொழிலதிபர் கிடைத்தால் அவர்களைத் தொடங்க சொல்லுவோம் என்றார். அப்போதைய தொழில்துறை அமைச்சர் திரு.ஆர்.எம்.வீரப்பனுக்கு கடிதம் எழுதினேன். எதுவுமே சரியாக வரவில்லை. இதற்கிடையில் ‘வளர் தொழில்’ என்ற பெயரை உருவாக்கி பதிவு செய்து வைத்திருந்தேன்.  நாமே தொடங்கினால் என்ன ? என்ற எண்ணம் உருவாகி தனியாக தொடங்கிவிட்டோம்.

- ஜெயகிருஷ்ணன்,  வளர்தொழில்  பத்திரிகை ஆசிரியர்

நீங்கள் எத்தனையாவது பணக்காரர் ?

அந்திமழை அலுவலகத்திற்கு ஒரு தொலைபேசி அழைப்பு. குப்புசாமி என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர், முகேஷ் அம்பானி உலகத்தில் 17 வது பணக்காரன் என்று செய்தி வெளியிடும் நீங்கள், நான் உலகத்தில் எத்தனையாவது இடத்தில் இருக்கிறேன் என்று சொல்லமுடியுமா என்றார். முடியுமே என்றோம். குப்புசாமியின் மாத வருமானம் 12000 ரூபாய்.  அப்படியானால் அவரது வருடாந்திர வருமானம் டாலரில் 2667.

உலக வங்கியின் புள்ளி விபரங்களை அடிப்படையாக வைத்து www.globalrichlist.com என்ற இணையதளம் உங்களது வருமானத்-தின் அடிப்படையில் நீங்கள் எத்தனையாவது இடத்தில் இருக்கிறீர்கள் என்ற தகவலைத் தருகிறது.

குப்புசாமி உலகத்தில் 893734160 இடத்திலிருக்கும் பணக்காரர். உலகின் மொத்த ஜனத்தொகை 600 கோடிக்கும் மேல். அவர் உலகில் முதல் 14.89 சதவீதத்திற்குள் வருகிறார். உலகில் 85.11 சதவிகித மக்களின் மாத வருமானம் ரூ 12,000-க்கும் கீழ்.

உலக வங்கியின் புள்ளி விவரப்படி முதல் பத்து சதவிகித மக்கள் உலக மொத்த வருமானத்தில் 50.8 சதவிகிதத்தை பெறுகிறார்கள். கீழிருந்து 50 சதவிகித மக்கள் மொத்த வருமானத்தில் 8.5 சத-விகிதத்தைத் தான் பெறுகிறார்கள். இந்த ஐம்பது சதவிகித மக்களின் அதிகபட்ச மாத வருமானம் ரூ.3825 தான். இதிலும் கொடுமை என்னவென்றால் உலகின் கடை நிலை பத்து சதவிகித மக்களின் அதிகபட்ச மாத வருமானம் ரூ 1800 தான்!

சில நாற்காலிகளும் கரும்பலகைகளும்

பெங்களூர் ஐ.ஐ.எம் --ல் எம்பிஏ படித்த பின் சத்திய-நாராயணாவிற்கு இந்தியாவின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவன-மான ரான்பேக்ஸியில் வேலை.

சொகுசு வாழ்க்கை. கனவு வேறாக இருந்தது. அடுத்தவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதில் ஆர்வம் கொண்டிருந்த சத்தியா ஏப்ரல் 1994 ஆம் ஆண்டு வேலையை உதறி விட்டு எம்பிஏ நுழைவு தேர்வு எழுதுபவர்களுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்த ஆரம்பித்தார். முதலில் வீட்டிலே பாடம் நடத்தினார். சில நாற்காலிகளும் ஒரு கரும்பலகையும் தான் முதலீடு. பிறகு கூட்டம் சேர ஒரு இடம் பிடித்து நிறுவனம் ஆரம்பித்தார், Career Launcher. பதினேழு  வருடத்திற்கு பின் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள், நிர்வாகுகள், 225 பயிற்சி மையங்கள் என்று கொடி கட்டி பறக்கிறது. இவ்வளவு உயரத்திற்கு போன பிறகும் இன்றும் சத்தியநாராயணா பாடம் எடுப்பதை விடவில்லை. அதுதான் சத்தியாவிற்கு பிடித்தமான ஒன்று.

நவம்பர், 2012.

logo
Andhimazhai
www.andhimazhai.com