தோற்று ஜெயித்தவர்!

தோற்று ஜெயித்தவர்!

உலகம் உன்னுடையது

Failure is an enigma. You worry about it and it teaches you something’ என்று கூறும் ஜேம்ஸ் டைசனின்  வாழ்க்கையின் நீண்ட பயணம் போராட்டமும் சிக்கல்களும் நிறைந்ததாகவே இருந்திருக்கிறது.

இங்கிலாந்தில் பிறந்த ஜேம்ஸின் இளமைக்காலம் நீண்ட தூரம் ஓடுவதிலேயும், டெக்னாலஜியின் சாகசங்களைப் பற்றி படிப்பதிலேயும் கழிந்திருக்கிறது.

படிப்பிற்கு பின் சிறு சிறு பொருட்களை உருவாக்குவதில் தேர்ச்சி பெற்ற ஜேம்ஸின் தயாரிப்புகள் பற்றி பிபிசி‘ நாளைய உலகம்’ என்ற பெயரின் நிகழ்ச்சி தயாரித்தது. ஜப்பானில் நடந்த உலக டைசன் போட்டியில் பரிசு பெற்ற ஜேம்ஸின் ‘G Force’ கிளினர் என்ற கண்டுபிடிப்பை விற்பதற்கு பெரும் பாடுபட்டு கடைசியில் தோல்வியைத் தழுவினார்.

தனது 39 வயது வரை மனைவியின் சம்பாத்தியத்தில் வாழ்ந்த ஜேம்ஸின் வாழ்க்கை தொடர்ச்சியான தோல்விகளால் ஆனது. அதன் பின் அவரது யு.எஸ். பேட்டண்ட் ஒன்றை விற்று அதன் மூலம் கிடைத்த வருவாயில் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார். பதினைந்து வருட தொடர் உழைப்பிற்கு பின் அவரது நிறுவனம் வெற்றியை நோக்கி நகர்ந்தது. இன்று 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனையாகின்றன ஜேம்ஸ் நிறுவனத்தின் பொருட்கள். தற்போது 66 வயதாகும் ஜேம்ஸின் சொத்து மதிப்பு 30900 கோடி ரூபாய் . ஜேம்ஸின், ‘You need a stubborn belief in an idea in order to see it realised’ என்ற வார்த்தை சத்தியமானது.

திரைக்கதை எழுத சம்பளம் 30 கோடி

திரைக்கதை எழுதுவதற்கு அதிகமாக பணம்  வாங்கியவர்கள் படியலில் முதலிடம் பில் மார்சிலி - டெரி ரோசியா  ஜோடிக்கு தான். இவர்கள் இணைந்து எழுதிய ’ஈஉஒஅஙக்’ படத்தின் திரைக்கதைக்கு ஐந்து மில்லியன் யூ.எஸ்.டாலர் சன்மானமாக கிடைத்திருக்கிறது. அதாவது இந்திய மதிப்பில் 31 கோடி ரூபாய். சயின்ஸ் பிக்சன் திரில்லர்.

ரொமான்ஸ் சமாச்சாரங்கள் நிறைந்த இப்படத்தை டோனி ஸ்காட் இயக்கியுள்ளார். கோலிவுட்டில் திரைக்கதை எழுதுபவர்களுக்கு என்ன கிடைத்திருக்கிறது என்று கேட்டால் பெரும்பாலும் சோகக் கதைகளே பதிலாக கிடைத்து வருகின்றன.

பணமொழி

பணம் மட்டுமே உருவாக்கக்கூடிய தொழில் நல்ல தொழில் அல்ல

- ஹென்றி ஃபோர்ட்

அக்டோபர், 2013

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com