1. நேற்றிரவு புதுதில்லிக்கு வந்த ரசிய அதிபர் புதினை விமான நிலையத்துக்குச் சென்று வரவேற்ற பிரதமர் மோடி. இரவு விருந்தும் அளித்தார்.
2. இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டுத் தலைவர்களை எதிர்க்கட்சித் தலைவர் சந்திக்கும் மரபை பா.ஜ.க. நிறுத்திவிட்டது- இராகுல் குற்றச்சாட்டு
3. திருப்பரங்குன்ற விவகாரம்- உயர்நீதிமன்ற அமர்வின் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாட்டு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
4. இரண்டாவது நாளாக திருப்பரங்குன்றத்தில் திரண்ட பா.ஜ.க., இந்துத்துவ அமைப்பினர்- தீபம் ஏற்ற போலீஸ் தடை; மீறியதால் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கைது.
5. நயினார் நாகேந்திரன் முதலிய பா.ஜ.க.வினர் கைதுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்; தேவையில்லாமல் அரசு பதற்றத்தை உருவாக்குவதாகவும் கருத்து.
6. ஜெயலலிதா ஆட்சியில் 2014ஆம் ஆண்டு கடைப்பிடிக்கப்பட்ட தீர்ப்பையே தி.மு.க. அரசும் பின்பற்றுகிறது- அமைச்சர் இரகுபதி விளக்கம்
7. பா.ம.க. விவகாரம்- இராமதாஸ் தரப்பு உரிமையியல் நீதிமன்றத்தை அணுக தேர்தல் ஆணையம் ஆணை
8. அமித்ஷாவுடன் அண்ணாமலை சந்திப்பு- தமிழகப் பயணம் குறித்து ஆலோசனை எனத் தகவல்
9. 77 இலட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு- தமிழக அதிர்ச்சி
10. அடுத்த ஆண்டு அரசுப் பணியாளர் தேர்வுகள் ஆறு மட்டும் போதுமா?- அன்புமணி கேள்வி