நூறு நாள் வேலைத் திட்டத்துக்கு ரூ.3,796 கோடியை மத்திய அரசு வழங்கவில்லை என்றும் அதை விரைவில் விடுக்க வேண்டும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் உரையில் கூறியுள்ளார்.
பட்ஜெட்டின் சில முக்கிய அறிவிப்புகள்:
47 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு, தேர்ந்தெடுக்கப்பட்ட 500 இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ரூ.1.33 கோடி ஒதுக்கீடு
புதிதாக தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ள ரூ. 7 கோடி ஒதுக்கீடு
கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 1 லட்சம் புதிய வீடுகள்
கிராம சாலைகளை மேம்படுத்த ரூ.120 கோடி ஒதுக்கீடு
100 நாள் வேலைத் திட்டத்துக்கு ரூ.3,796 கோடியை மத்திய அரசு வழங்கவில்லை. விரைவில் அதைத் தரவேண்டும்.
பழமையான ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்க ரூ.2 கோடி ஒதுக்கீடு
வெளிநாடுகளிலும் புத்தகக் கண்காட்சி நடத்த ரூ. 2 கோடி ஒதுக்கீடு
சென்னைக்கு அருகே 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த புதிய நகரம் உருவாக்கப்படும்