1000 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூ.1 இலட்சம் மானியம்!

1000 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூ.1 இலட்சம் மானியம்!
Published on

தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுநர்கள் - தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள 1000 பெண் / திருநங்கை ஓட்டுநர்கள் சொந்தமாக புதிய ஆட்டோ வாகனம் வாங்கும் செலவினத்தில் தலா ஒரு இலட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படும் என தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று அந்தத் துறையின் மானியக் கோரிக்கை விவாதத்தில் இந்த அறிவிப்பையும் அவர் வெளியிட்டார்.

”திருக்குவளை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.3.5 செலவில் புதிய மாணவர் விடுதி கட்டடம் கட்டப்படும்.

32 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 67 கோடியே 64 இலட்சம் ரூபாய் செலவில் பழைய கட்டடங்களின் உட்கட்டமைப்பு, அடிப்படை வசதிகள் புதுப்பிக்கப்படும்.

தொழிற்பயிற்சி நிலையங்களிலுள்ள 50 விடுதிகள் 22 கோடியே 98 இலட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.” என்றும் அமைச்சர் அறிவித்தார்.

கட்டுமானத் தொழிலாளர்கள் தொடர்பான அறிவிப்புகளையும் அமைச்சர் வெளியிட்டார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com