10,11 தேதிகளில் வட தமிழகத்தில் எங்கெங்கு மழை?

மழை
மழை
Published on

தென்னிந்தியாவில் வளிமண்டலத்தின் மேல், கீழ் அடுக்குகளில் சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் வரும் 10ஆம்தேதி அன்று கன மழை பெய்யக்கூடும். 

11ஆம் தேதி தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. 

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உண்டு. 

logo
Andhimazhai
www.andhimazhai.com