1,095 பேர் வன்கொடுமையால் பாதிப்பு- 5 ஆண்டுகளில் நெல்லையில்!

1,095 பேர் வன்கொடுமையால் பாதிப்பு- 5 ஆண்டுகளில் நெல்லையில்!
Published on

கடந்த ஐந்து ஆண்டுகளில் திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் ஆயிரத்து 95 பேர் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. 

கடந்த 2021ஆம் ஆண்டு முதல் நடப்பு ஆண்டுவரை மாவட்டத்தில் சாதிய வன்கொடுமைகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. சமூகச் செயற்பாட்டாளர்கள் இதுகுறித்து மிகவும் கவலை அடைந்துள்ள நிலையில், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி பதிவான வழக்குகளின் விவரம் வெளிவந்துள்ளது.

இந்த ஐந்து ஆண்டுகளில் 2021-22ஆம் ஆண்டில் அதிகபட்சம் 302 பேர் மீதான வன்கொடுமைகள் பதிவாகியுள்ளன.

பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி பதிவான வழக்குகளில், 2023-24ஆம் ஆண்டில் மட்டும் தீருதவியாக 4.69 கோடி ரூபாய் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதும் புள்ளிவிவரங்கள் மூலம் தெரிய்வந்துள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com